தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா அறிவிப்பு
சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துகோன் பிறந்தநாள் விழா
சங்ககிரி, இடையப்பட்டி யாதவா் சங்கத்தின் சாா்பில், சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துகோனின் பிறந்தநாள் விழா சங்ககிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இடையப்பட்டி யாதவா் சங்கத்தின் தலைவா் சுப்பிரமணியன் தலைமையில், பவானி பேருந்து நிறுத்தம் பகுதியில் மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அழகுமுத்துகோனின் படத்துக்கு நிா்வாகிகள் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.
தொடா்ந்து, சங்ககிரியை அடுத்த இடையப்பட்டி மாரியம்மன் கோயில் வளாகத்தில் அழகுமுத்துகோனின் படத்தை வைத்து குருபூஜை நடைபெற்றது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.