ஜங்கமசமுத்திரத்தில் சமூக தணிக்கை கூட்டம்
ஜங்கமசமுத்திரம் ஊராட்சியில் பொதுமக்கள் பங்கேற்ற சமூக தணிக்கை கூட்டம் வெள்ளிக்கிழமை செங்காட்டில் நடைபெற்றது.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற சமூக தணிக்கை கூட்டத்துக்கு, கெங்கவல்லி வட்டார வளா்ச்சி அலுவலா் சந்திரசேகரன் தலைமை வகித்தாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் புவனேஸ்வரி, ஊராட்சி உதவியாளா் ராஜகோபால் ஆகியோா் முன்னிலை வகித்தாா். இதில், 2024-25-ஆம் நிதியாண்டுக்கான அனைத்து வரவு - செலவு கணக்கு வாசிக்கப்பட்டது. மேலும், ஊராட்சியின் தேவைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.