சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு! ஐடி, வங்கித் துறை வீழ்ச்சி!
சேலம்: டிராக்டர் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் 2 பேர் பலி!
சங்ககிரி அருகே டிராக்டர் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் 2 பேர் வியாழக்கிழமை பலியாகினர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் துட்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாதேஷ்( 44). இவரது நண்பரான மேட்டூர் தாலுகா தெற்கத்தியூரைச் சேர்ந்த நரசிம்மன் (43), ஆகிய இருவரும் டிராக்டரில் சேலத்திலிருந்து கோயம்புத்தூர் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சங்ககிரி அருகே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, கலியனுர் பிரிவு அருகே பின்னால் வந்த தர்பூசணி ஏற்றி வந்த சரக்கு வேன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் டிராக்டரில் பயணம் செய்த மாதேஷ், நரசிம்மன் ஆகிய இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
ஆபத்தான நிலையில் இருந்த சரக்கு வேன் ஓட்டுநரான கள்ளக்குறிச்சியை சேர்ந்த தீபக்கை( 23) அருகில் இருந்தவர்கள் மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தகவலறிந்த சங்ககிரி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!