தில்லியில் பாஜக ஆட்சி அமைந்தால் மத்திய அரசின் திட்டங்கள் அமல் -வீரேந்திர சச்தேவா...
சேலம்: பள்ளி வகுப்பறையில் மாணவரை கால் பிடித்து விடச் சொன்ன ஆசிரியர்; பரவிய வீடியோ, பாய்ந்த நடவடிக்கை
சேலம் மாவட்டம், தலைவாசல் தாலூகாவிற்கு உட்பட்ட கிழக்கு ராஜாபாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் கிழக்கு ராஜாபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 49 மாணவிகள், 41 மாணவர்கள் என 90-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், கல்வி பயின்று வருவதோடு தலைமை ஆசிரியர் உட்பட 6 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதனிடையே பள்ளியில் பணியாற்றி வரும் காமக்காபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபிராகாஷ் எனும் கணக்கு ஆசிரியர் குடிபோதையில் பள்ளிக்கு வருவதோடு, மாணவர்களுக்கு முறையாக பாடம் எடுக்காமல் வகுப்பறையில் மாணவர்களை கால் அழுத்தச் சொல்லி ஓய்வெடுக்கும் வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி, அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து மாணவர்கள் பலமுறை தலைமை ஆசிரியர் உமாதேவியிடம் கூறியும், அதற்கு `ஆசிரியரைப் பற்றி என்னிடமே புகார் கூறுகிறீர்களா?' எனக் கூறி மாணவர்களை முட்டிப்போட வைத்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
அதையடுத்து, போதையில் வந்து பாடம் கற்பிக்காமல் மாணவர்களை சித்ரவதை செய்யும் போதை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் வலியுறுத்தினர். இந்த நிலையில் மாவட்டக் கல்வி அதிகாரி கபீர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட கணித ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.