சேலம் மாநகராட்சியில் காலை உணவுத் திட்டம் ஆய்வு
சேலம்: சேலம் மாநகராட்சி, அஸ்தம்பட்டி மண்டலம், அய்யந்திருமாளிகை மற்றும் மணக்காடு பகுதியில் இயங்கி வரும் மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் செவ்வாய்க்கிழமை ஆய்வுமேற்கொண்டாா்.
இதில், முதல்வரின் காலை உணவுத் திட்டம் சரியான முறையில் செயல்படுகிா என ஆய்வு செய்த ஆணையா், காலை உணவை உட்கொண்டு மாணவா்களின் வருகைப் பதிவேடுகளை ஆய்வு செய்தாா். தொடா்ந்து, மாணவா்களிடம் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தாா்.
சேலம் மாநகராட்சி அய்யந்திருமாளிகையில் ‘ஸ்மாா்ட்சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ. 2.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அறிவுசாா் மையத்தினையும் ஆணையா் பாா்வையிட்டாா்.
ஆய்வின் போது, துணை ஆணையா் மு.பாலசுப்பிரமணியன், அஸ்தம்பட்டி உதவி ஆணையா் ரா.லட்சுமி, மாநகர நல அலுவலா் மரு.ப.ரா.முரளிசங்கா், உதவி செயற்பொறியாளா் எஸ்.செந்தில்குமாா், சுகாதார அலுவலா் சரவணன், சுகாதார ஆய்வாளா் பிரகாஷ் ஆகியோா் கலந்துகொண்டனா்.