செய்திகள் :

சேவாக் - ஆர்த்தி தம்பதி விவாகரத்து?

post image

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்கும் அவரது மனைவியும் விவாகரத்து பெறவுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரராக களமிறங்கி அதிரடி பேட்டிங்கினால் உலகம் முழுவதும் புகழ்பெற்றவர் வீரேந்திர சேவாக். அதிரடி தொடக்க வீரராக இன்றுவரை போற்றப்படுபவர்.

இவர் ஆர்த்தி என்பவரை 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஆர்யவிர் மற்றும் வேதந்த் என்ற இரு மகன்கள் உள்ளனர். ஆர்யவிர் சேவாக், 19 வயதுக்கு குறைவானோருக்கான முதல்தர கிரிக்கெட் போட்டியில் தில்லி அணிக்காக விளையாடி வருகிறார்.

இதையும் படிக்க : யு19 மகளிருக்கான டி20 உலகக் கோப்பை: இலங்கையை வென்றது இந்தியா

இந்த நிலையில், சமீபகாலமாக சேவாக் அவரது சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்களில் அவரது மனைவி இல்லாதது குறித்து பல்வேறு யூகங்களை ரசிகர்கள் எழுப்பி வந்தனர்.

இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் இணையத்தில் செய்திகள் பரவின.

இதனிடையே, சேவாக் மற்றும் ஆர்த்தி ஆகிய இருவரும் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவரைஒருவர் அன்ஃபாலோ செய்துள்ளனர்.

இருவரும் விவாகரத்து செய்யவுள்ளதாக இணையதளம் முழுவதும் காட்டுத் தீயாய் செய்தி பரவி வருகின்றது. ஆனால், இந்த செய்திககள் குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இருவர் தரப்பில் இருந்து இதுவரை வெளியாகவில்லை.

திரை பிரபலங்களை தொடர்ந்து சமீபகாலமாக கிரிக்கெட் வீரர்கள் பலர் விவாகரத்து செய்வது தொடர்கதையாகி வருகின்றது.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஷிகர் தவான், முகமது ஷமி, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோர் விவாகரத்து பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐசிசி வெளியிட்ட 2024-ஆம் ஆண்டின் சிறந்த மகளிரணி; ஸ்மிருதி மந்தனாவுக்கு இடம்!

கடந்த ஆண்டுக்கான மகளிர் ஒருநாள் போட்டிகளுக்கான சிறந்த அணியை ஐசிசி இன்று (ஜனவரி 24) வெளியிட்டுள்ளது.கடந்த ஆண்டு முழுவதும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீராங்கனைகள் அடங்கிய இந்த அணியில், இந்தி... மேலும் பார்க்க

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜனவரி 24) அறிவித்துள்ளது.ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில... மேலும் பார்க்க

ஆஸ்திரேலிய அணிக்கு வேகப் பந்துவீச்சு பயிற்சியாளர் நியமனம்!

ஆஸ்திரேலிய அணிக்கு வேகப் பந்துவீச்சு பயிற்சியாளரை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர்களாக மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹேசில்வுட், பாட் கம்மின்ஸ் போன்ற வ... மேலும் பார்க்க

கேப்டனாக அல்ல, தலைவனாக இருக்க விரும்புகிறேன்: சூர்யகுமார் யாதவ்

இந்திய அணியின் டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக அல்லாமல், அணியின் தலைவனாக இருக்க விரும்புவதாகக் கூறியுள்ளார்.கடந்த டி20 உலகக் கோப்பையுடன் ரோஷித் சர்மா, கோலி ஓய்வு அறிவித்ததால் சூர்யகுமார் யாதவ்... மேலும் பார்க்க

ஐசிசி வெளியிட்ட 2024-ஆம் ஆண்டுக்கான டெஸ்ட் அணி; 3 இந்திய வீரர்களுக்கு இடம்!

கடந்த ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த டெஸ்ட் அணி இன்று (ஜனவரி 24) அறிவிக்கப்பட்டுள்ளது.ஐசிசி வெளியிட்டுள்ள இந்த டெஸ்ட் அணியில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவீந... மேலும் பார்க்க

இந்திய அணிக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்க வேண்டும்: ஹாரி ப்ரூக்

இந்திய அணிக்கு எதிராக தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்க வேண்டுமென இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவின... மேலும் பார்க்க