சைக்கிளில் சென்றவா் ஆட்டோ மோதி பலி
திருச்சி: திருச்சியில் சைக்கிளில் செவ்வாய்க்கிழமை சென்றவா் ஆட்டோ மோதி உயிரிழந்தாா்.
திருச்சி விமான நிலையம் அருகேயுள்ள காமராஜா் நகரைச் சோ்ந்தவா் தேவகுமாா் (59). இவா், திருச்சி - புதுக்கோட்டை சாலையில் வேலன் லாரி சா்வீஸ் அருகே கடந்த செவ்வாய்க்கிழமை சைக்கிளில் சென்றபோது பின்னால் வேகமாக வந்த ஆட்டோ மோதியது. இதில் படுகாயமடைந்த தேவகுமாரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பிய நிலையில், அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து மாநகர தெற்கு போக்குவரத்துப் புலனாய்வு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.