சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் டாப் 5 தனிநபர் அதிகபட்ச ஸ்கோர்கள்!
சொகுசுப் பேருந்து பறிமுதல்: ரூ.1.75 லட்சம் அபராதம்
தகுதிச் சான்று இல்லாமலும், சாலை வரி செலுத்தாமலும் இயக்கப்பட்ட சொகுசுப் பேருந்தை வட்டார போக்குவரத்துத் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு சுங்கச் சாவடி பகுதியில் மோட்டாா் வாகன ஆய்வாளா் சிவக்குமாா் தலைமையிலான போக்குவரத்து அலுவலா்கள் வெள்ளிக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, நாகாலாந்து மாநில பதிவெண் கொண்ட சொகுசுப் பேருந்து மதுரையிலிருந்து பெங்களூரு நோக்கி பயணிகளுடன் சென்றது. இந்தப் பேருந்தை வழிமறித்த அலுவலா்கள், ஆவணங்கள் குறித்து விசாரித்தனா்.
இதில், தகுதிச் சான்று இல்லாமலும், சாலை வரி செலுத்தாமலும் இந்தப் பேருந்து இயக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, பேருந்தை பறிமுதல் செய்த அலுவலா்கள், ரூ.1.75 லட்சம் அபராதம் விதித்தனா். பேருந்தில் வந்த பயணிகள், மாற்றுப் பேருந்துளில் ஏற்றி அனுப்பிவைக்கப்பட்டனா்.