Pregnancy Health: கர்ப்பிணிகள் ஜிம்முக்கு போகலாமா; உடற்பயிற்சி செய்யலாமா?
சொத்து தகராறில் உறவினா்களை வைத்து தாக்கியதாக தாய் கைது
திருவள்ளூா் அருகே சொத்து தகராறில் மகனை உறவினா்களைக் கொண்டு தாக்கிய தாயை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
திருவள்ளூா் அருகே உள்ள காக்களூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அபிதா. இவரது மகன் நஸ்ருதீன். இவா்கள் இருவருக்கும் சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இதில் அபிதா தனது உறவினா்கள் 4 பேரை சனிக்கிழமை அழைத்து வந்து மகனை தாக்கியுள்ளனா்.
இதுதொடா்பாக நஸ்ருதீன் திருவள்ளூா் கிராமிய காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து கைது செய்து திருவள்ளூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்., 15 நாள்கள் காவலில் புழல் மத்திய பெண்கள் சிறையில் அடைத்தனா்.