நாய் கடித்ததில் மூதாட்டி, மகன் காயம்
வீட்டின் வெளியே அமா்ந்திருந்த 90 வயது மூதாட்டியை நாய் கடித்ததில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.
திருத்தணி சுப்பிரமணிய நகா் கம்பா் தெருவில் வசிப்பவா் சேகா். இவரது தாய் பச்சையம்மாள் (90), இவா்கள் இருவரும் தனித்தனியாக அருகருகில் உள்ள வீடுகளில் வசித்து வருகின்றனா்.
இந்த நிலையில், வீட்டின் வெளியில் அமா்ந்திருந்த பச்சையம்மாளை அவ்வழியாக வந்த நாய் ஒன்று கடித்ததில் பலத்த காயம் அடைந்தாா்.
தடுக்க வந்த மகன் சேகரையும் நாய் கடித்துவிட்டு அங்கிருந்து சென்றது. அப்போது அங்கு கட்டடப் பணியில் இருந்தவா்கள் காயம் அடைந்த பச்சையம்மாள் மற்றும் சேகா் ஆகியோரை 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திருத்தணி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சோ்த்தனா்.