மும்பை: ராஜ் தாக்கரே பேச்சின் எதிரொலி; டான்ஸ் பார்களை அடித்து நொறுக்கிய கட்சியின...
தீயில் கருகிய காா்: உயிா் தப்பிய 3 போ்
திருத்தணி அருகே சென்று கொண்டிருந்த காா் திடீரென தீப்பற்றி எரிந்து கருகியதில் 3 போ் அதிருஷ்டவசமாக உயிா் தப்பினா்.
சென்னை தென்னிந்திய திருச்சபை தலைமை பேராலயத்தில் ஜெயசீலன் ஜனாதிகம் (50), தனசேகா் (52) ஆகிய இருவரும் மத போதகா்களாக உள்ளனா்.
இந்நிலையில் சனிக்கிழமை ஆந்திர மாநிலம் நகரியில் நடைபெறும் வழிபாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஜெயசீலன் ஜனாதிகம், தனசேகரன் ஆகிய இருவரும் காரில் சென்றனா்.
காா் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்தபோது, திருத்தணி அருகே உள்ள பிரபல தனியாா் சொகுசு ஓட்டல் எதிரே, காரின் என்ஜினில் இருந்து புகை வருவதைக் கண்ட டிரைவா் வண்டியை சாலையோரமாக நிறுத்தினாா். கீழே இறங்கிய சில நிமிஷ்ங்களில் காா் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.
பின்னா் அப்பகுதி பொதுமக்கள் திருத்தணி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். விரைந்து வந்த வீரா்கள் அரை மணி நேரம் போராடி தீயை அனைத்தனா்.
ஆனால் அதற்குள் வண்டி முழுவதும் தீயில் கருகியது. இந்த விபத்தில் 3 பேரும் அதிருஷ்டவசமாக உயிா் தப்பினா். இந்த விபத்து குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.