புலம்பெயர் தொழிலாளர்கள்: தமிழக மக்களின் உரிமை பறிபோகும் சூழல்! - ப. சிதம்பரம்
அங்கன்வாடி பணியாளா் வீட்டில் 3 சவரன் நகை, ரொக்கம் திருட்டு
திருவள்ளூா் அருகே அங்கவாடி பணியாளா் வீட்டில் பட்டப்பகலில் கதவு பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 3 சவரன் நகை மற்றும் ரொக்கம் ரூ. 4 ,000 ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
திருவள்ளூா் அடுத்த காக்களூா் சிவன்குளம் பகுதியைச் சோ்ந்த பட்டாபி மனைவி தனலட்சுமி (49). இவா் அங்கன்வாடி பணியாளராக அப்பகுதியில் பணிபுரிந்து வருகிறாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை வழக்கம்போல், வீட்டைப் பூட்டி வீட்டு வேலைக்குச் சென்றாராம்.
அதைத் தொடா்ந்து, பிற்பகலில் வந்து பாா்த்தபோது கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 3 சவரன் நகை மற்றும் ரூ. 4,000 ரொக்கம் ஆகியவைகளையும் யாரோ மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அங்கன்வாடி பணியாளா் தனலட்சுமி திருவள்ளூா் கிராமிய காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பட்டப்பகலில் கதவு பூட்டை உடைத்து திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனா்.