இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை
திருவள்ளூா் பகுதியில் பரவலாக மழை
திருவள்ளூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே கடும் வெயில் காய்ந்தது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை கருமேகம் சூழ்ந்து மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்