'விஜய் மீது ஏன் வழக்கு போடவில்லை? தமிழ்நாடு அரசு அச்சப்படுகிறதா?' - திருமாவளவன் ...
'சோம்பேறி ஜோ பைடனால் தான் சீனா 'இப்படி' செய்கிறது!' - சீனா மீது கோபத்தில் ட்ரம்ப்; என்ன ஆனது?
அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது வரும் நவம்பர் மாதம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிறுத்தி வைக்கப்பட்ட வரி
இந்தப் பேச்சுவார்த்தையால், கடந்த ஏப்ரல் மாதம் முதல் அமெரிக்கா சீனா மீது கொஞ்சம் கொஞ்சமாக விதித்து வந்த 135 சதவிகிதம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் சீன பொருள்களுக்கு அமெரிக்கா 30 சதவிகித வரியைத் தான் வசூலித்து வருகிறது.

மேலும், ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதாக இந்தியா, பிரேசில் மீது அமெரிக்க அரசு 25 சதவிகித வரி பிளஸ் கூடுதல் 25 சதவிகித வரியை விதித்துள்ளது.
ஆனால், ரஷ்யாவின் டாப் இறக்குமதியாளரான சீனா மீது இந்த வரி விதிக்கப்படவில்லை. இதற்கு முக்கிய காரணம், அமெரிக்கா - சீனா இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தை தான்.
போன்கால்
கடந்த 19-ம் தேதி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சீன அதிபர் ஜின்பிங்குடன் தொலைபேசியில் பேசினார். இந்தப் போன்காலில் டிக்டாக் ஒப்பந்தம் பேசி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஒப்பந்தம் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.
சீன அதிபர் ஜியை சந்திக்கிறார் ட்ரம்ப்
இந்த நிலையில், ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில், ட்ரம்ப் - ஜின்பிங் சந்திப்பு குறித்து பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், "பேச்சுவார்த்தையில் பலனடைய சீனா அமெரிக்காவில் இருந்து சோயா பீன்ஸ் வாங்குவதை நிறுத்திவிட்டது. இது அமெரிக்க நாட்டின் சோயா பீன்ஸ் விவசாயிகளைப் பெரிதும் பாதித்துள்ளது.
வரி விதிப்பின் மூலம் நாம் ஏகப்பட்ட பணம் பெற்றுள்ளோம். அதில் சிறு பங்கில் இந்த விவசாயிகளுக்கு உதவப்போகிறோம். நான் நம்முடைய விவசாயிகளைக் கைவிட மாட்டேன்.

சீனா பில்லியன் டாலர் கணக்கில் நம்மிடமிருந்து விவசாய பொருள்கள், முக்கியமாக சோயா பீன்ஸ் வாங்க இருந்தது. ஆனால், அந்த ஒப்பந்தத்தை சரியாக சோம்பேறி ஜோ பைடன் நடைமுறைப்படுத்தவில்லை. ஆனால், இனி அது நல்லபடியாக நடைமுறைப்படுத்தப்படும்.
நாம் நமது தேச பக்தர்களை எப்படி நேசிக்கிறேனோ, அதே அளவில் விவசாயிகளையும் நேசிக்கிறேன்.
அடுத்த நான்கு வாரங்களில், நான் சீன அதிபர் ஜியை சந்திக்க உள்ளேன். அந்தக் கலந்துரையடலில் சோயா பீன்ஸ் குறித்து தான் முக்கியமாக பேசப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.