Maareesan: "அத்தருணத்தில் தான் ஒரு அற்புதமான நடிகர் என்பதைக் காட்டினார்" - வடிவே...
ஜக்தீப் தன்கர் எங்கே? அமித் ஷாவுக்கு சஞ்சய் ரௌத் கடிதம்
புது தில்லி: முன்னாள் குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் எங்கே என்று கேட்டு, சிவசேனை கட்சியின் உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த சஞ்சய் ரௌத், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
அவர் எங்கே இருக்கிறார் என்பதை அறிந்து தொடர்புகொள்ள எடுத்த முயற்சிகள் பலனளிக்காததால், இந்தக் கடிதத்தை எழுதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜக்தீப் தன்கர், ஜூலை 21ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்தார். நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கியபோது, மிக உற்சாகத்தோடு அவை நடவடிக்கையில் பங்கேற்றிருந்த தன்கர், திடிரென ராஜிநாமா அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.