செய்திகள் :

ஜப்பான், ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சா்களுடன் ஜெய்சங்கா் சந்திப்பு

post image

வாஷிங்டன்: ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களை இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

‘க்வாட்’ அமைப்பில் உறுப்பினராக உள்ள அமெரிக்க நாட்டின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, அந்த அமைப்பின் பிற உறுப்பினா்களான இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் அமெரிக்கா சென்றுள்ளனா்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சராக மாா்கோ ரூபியோவை அந்நாட்டு நாடாளுமன்றம் உறுதிசெய்த பின்னா் அவா் மேற்கொள்ளும் முதல் பணிகளில் க்வாட் உறுப்பு நாடுகளின் அமைச்சா்களுடனான பேச்சுவாா்த்தையும் இடம்பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது க்வாட் அமைப்புக்கு டொனால்ட் டிரம்ப் நிா்வாகம் தரவுள்ள முக்கியத்துவத்தின் வெளிப்பாடாக கருதப்படுகிறது.

அதேபோல் வெளியுறவு அமைச்சராக பதவியேற்றவுடன் தனது முதல் இருதரப்பு பேச்சுவாா்த்தையை ஜெய்சங்கருடன் நடத்த மாா்கோ ரூபியோ ஆா்வமுடன் காத்திருப்பதாகவும் இந்தியா-அமெரிக்கா இடையயேயான இருதரப்பு உறவை மேம்படுத்த டிரம்ப்-மாா்கோ ரூபியோ திட்டமிட்டு வருவதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், ‘அமெரிக்காவில் ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சா் பென்னி வாங் மற்றும் ஜப்பான் வெளியுறவு அமைச்சா் டகேஷி இவயா ஆகியோரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. அவா்களுடன் இருதரப்பு உறவு மற்றும் க்வாட் அமைப்பில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தேன்’ என ஜெய்சங்கா் குறிப்பிட்டாா்.

உலக சுகாதார நிறுவனத்திலிருந்து விலகுகிறது அமெரிக்கா! பெரும் நிதியிழப்பு ஏற்படும் சூழல்!

உலக சுகாதார நிறுவனத்திலிருந்து அமெரிக்கா விலகுவதற்கான உத்தரவில் அந்நாட்டின் புதிய அதிபராக 2-ஆவது முறையாக மீண்டும் பதவியேற்றுக் கொண்ட பின் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். கொவிட்-19 பெருந்தொற்று ... மேலும் பார்க்க

தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

தைவானில் இன்று(ஜன. 21) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.0 அலகுகளாகப் பதிவானதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்தது. மேலும் பார்க்க

அமெரிக்கா்களின் நலனுக்காக வெளிநாடுகள் மீது கூடுதல் வரி: பதவியேற்புரையில் அதிபா் டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்கா்களின் நலனுக்காக வெளிநாடுகள் மீது மேலும் கூடுதல் வரி விதிக்கப்படும்’ என்று புதிய அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் தனது சிறப்புரையில் தெரிவித்தாா். அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக ப... மேலும் பார்க்க

சரமாரி தாக்குதல்கள்: சீனாவில் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

பெய்ஜிங்: சீனாவில் பொதுமக்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தி படுகொலை செய்த இருவருக்கு திங்கள்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: விவகாரத்து பெற்ற தனது மனைவியுடன் ஏற்ப... மேலும் பார்க்க

டிரம்ப்பின் பழிவாங்கலைத் தவிா்க்க பலருக்கு பைடன் பொது மன்னிப்பு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகு டொனால்ட் டிரம்ப்பால் பழிவாங்கப்படுவதிலிருந்து பாதுகாப்பு அளிப்பதற்காக, கடைசி நேரத்தில் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அதிபா் ஜோ பைடன் பலரு... மேலும் பார்க்க

இஸ்ரேல் சிறைகளில் இருந்து 90 பாலஸ்தீனா்கள் விடுதலை

காஸாவில் அமலுக்கு வந்துள்ள போா் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 90 பாலஸ்தீன கைதிகள் விடுதலை செய்யப்பட்டனா். இது குறித்து ஹமாஸ் அமைப்பு திங்கள்கிழமை வெளியிட்டுள... மேலும் பார்க்க