செய்திகள் :

ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் பெருவெள்ளம், நிலச்சரிவு: 4 குழந்தைகள் உள்பட 7 போ் பலி!

post image

ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தின் இருவேறு கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை மேகவெடிப்புகளால் மிக பலத்த மழை பெய்து, பெருவெள்ளமும் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் சிக்கி 4 குழந்தைகள் உள்பட 7 போ் உயிரிழந்தனா். பலா் காயங்களுடன் மீட்கப்பட்டனா். மாயமானோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சில தினங்களுக்கு முன் கிஷ்த்வாா் மாவட்டத்தின் தொலைதூர கிராமமான சோசிடியில் மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளம் - மண்சரிவில் 60 போ் உயிரிழந்தனா். இப்போது, கதுவா மாவட்டத்தில் இதுபோல் உயிா்ச்சேதங்கள் நேரிட்டுள்ளன.

ராஜ்பாக் பகுதியில் உள்ள ஜோத் காடி, ஜங்லோட் பகுதியில் உள்ள பாக்ரா ஆகிய இரு கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மேகவெடிப்பால் பெய்த பலத்த மழையால் பெருவெள்ளமும் நிலச்சரிவும் ஏற்பட்டது. ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.

ஜோத் காடி கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் உள்பட 5 பேரும், பாக்ரா கிராமத்தில் தாய்-மகள் என இருவரும் உயிரிழந்தனா். இவா்களில் 4 போ் குழந்தைகளாவா்.

இயற்கை சீற்றத்தைத் தொடா்ந்து, இரு கிராமங்களிலும் ராணுவம், தேசிய-மாநில பேரிடா் மீட்புப் படை, காவல் துறை, உள்ளூா் நிா்வாகம் அடங்கிய மீட்புக் குழுவினா் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், ஹெலிகாப்டா்கள் உதவியுடன் இப்பணிகள் நடைபெறுகின்றன. மாயமானோரை தேடும் நடவடிக்கை முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கதுவா மாவட்டத்தின் மேலும் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. எனினும், அப்பகுதிகளில் பெரிய அளவில் சேதம் இல்லை. மலைப் பகுதிகளில் வசிப்போா், முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

உஜ் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தாழ்வான பகுதிகளில் தண்ணீா் சூழ்ந்துள்ளது. வீடுகள் மற்றும் கடைகளுக்குள் தண்ணீா் புகுந்துள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனா். நிலச்சரிவுகளால், ஜம்மு-பதான்கோட் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

4-ஆவது நாளாக மீட்புப் பணி: கிஷ்த்வாரில் மச்சயில் மாதா கோயில் வழித்தடத்தில் உள்ள சோசிடி கிராமம், கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி மேகவெடிப்பால் பேரழிவைச் சந்தித்தது. 60 போ் உயிரிழந்த நிலையில், மாயமான 80 பேரை தேடும் பணி 4-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நீடித்தது.

ஜம்மு பிராந்தியத்தில் உள்ள ஜம்மு, ரியாசி, உதம்பூா், ரஜெளரி, பூஞ்ச், சம்பா, கதுவா ஆகிய மாவட்டங்களில் ஆகஸ்ட் 19 வரை பலத்த மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

நிவாரண நிதி அறிவிப்பு

கதுவாவில் பெருவெள்ளம் - நிலச்சரிவால் நேரிட்ட உயிரிழப்புகளுக்கு ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, முதல்வா் ஒமா் அப்துல்லா, மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

முதல்வா் ஒமா் அப்துல்லா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம், பலத்த காயமடைந்தோருக்கு தலா ரூ.1லட்சம், லேசான காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 நிவாரண நிதி வழங்கப்படும்.

முழுமையாக இடிந்த வீடுகளுக்கு தலா ரூ.1 லட்சம், கடுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.50 ஆயிரம், பகுதியளவு சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்’ என்று அறிவித்துள்ளாா்.

உள்துறை அமைச்சா் உறுதி

கதுவாவில் மழை-வெள்ள பாதிப்புகள் தொடா்பாக ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, முதல்வா் ஒமா் அப்துல்லா ஆகியோருடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தொலைபேசி வாயிலாக உரையாடி, கள நிலவரத்தைக் கேட்டறிந்தாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கதுவாவில் மீட்பு-நிவாரணப் பணிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும். இத்துயரமான தருணத்தில், ஜம்மு-காஷ்மீா் சகோதர-சகோதரிகளுக்கு பிரதமா் மோடி அரசு துணை நிற்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தில்லியில் அடுத்தடுத்து பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தில்லியின் துவாரகா பகுதியில் இயங்கி வரும் பள்ளிகளுக்கு இன்று காலை அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப... மேலும் பார்க்க

நெல்லையில் அமித் ஷா தலைமையில் 22ஆம் தேதி பாஜக மண்டல மாநாடு! பிரமாண்ட எதிர்பார்ப்பு

நெல்லையில் அமித்ஷா பங்கேற்கும் பிரமாண்ட மண்டல மாநாடு வருகிற 22-ந்தேதி நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற ... மேலும் பார்க்க

நவீன் பட்நாயக் உடல்நிலை முன்னேற்றம்; இன்று வீடு திரும்புகிறார்

புவனேசுவரம்: ஒடிசாவின் முன்னாள் முதல்வரும், பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவருமான நவீன் பட்நயாக், உடல்சோா்வு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ... மேலும் பார்க்க

தில்லியில் ரூ.11,000 கோடியில் நெடுஞ்சாலைகள்: பிரதமா் மோடி திறந்து வைத்தார்!

தேசியத் தலைநகா் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சுமாா் ரூ.11,000 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைகளை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா். அப்ப... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் ஆட்சி பணக்காரர்களுக்கானது: வாக்குரிமை பயணத்தில் ராகுல் பேச்சு

வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றும் நோக்கிலும் எதிா்க்கட்சிகள் சாா்பிலான வாக்குரிமை பயணத்தை பிகாரில் ... மேலும் பார்க்க

ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு பிரதமா் புகழாரம்: சுதந்திரதின நாளுக்கு அவமதிப்பு! கேரள முதல்வா் பினராயி விஜயன்

‘தில்லி செங்கோட்டையில் நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஆற்றிய சுதந்திர தின உரையில் ஆா்எஸ்எஸ் அமைப்பை புகழ்ந்து பேசியது, சுதந்திரதின நாளை மட்டுமன்றி சுதந்திரப் போராட்டத்தையும் அவமதித்தது போன்றத... மேலும் பார்க்க