செய்திகள் :

ஜம்மு - காஷ்மீர் தாக்குதல்: அமித் ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

post image

ஜம்மு - காஷ்மீர் தாக்குதல் குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

ஜம்மு- காஷ்மீரின் பஹால்காம் பகுதியில் பைசரன் எனும் புகழ்பெற்ற சுற்றுலாத் தளத்தில் இன்று (ஏப்.22) அடையாளம் தெரியாத முகமூடி அணிந்த பயங்கரவாதிகள், அங்கு கூடியிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர்.

இந்தத் தாக்குதலில் 12 சுற்றுலாப் பயணிகள் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து படுகாயமடைந்த நிலையில், ஒருவர் பரிதாபமாக பலியானார். அவர் யார் என்பது குறித்து இதுவரை எந்தவித அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், சௌதி அரேபியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

இதுபற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகையில், “பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஒருபோதும் தப்பிக்க முடியாது. அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். இதுபற்றி பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அவரிடம் விளக்கமளித்துள்ளேன்.

காஷ்மீர் தாக்குதல் பற்றி அதிகாரிகளிடம் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினேன். காஷ்மீரில் பாதுகாப்பு குறித்து தெரிந்துகொள்ள விரைவில் ஸ்ரீநகர் செல்லவிருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ஜம்மு - காஷ்மீர்: சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி!

அரசமைப்புச் சட்டப் பிரிவு 142-ஐ உயா்நீதிமன்றங்கள் பயன்படுத்த முடியாது: உச்சநீதிமன்றம்

‘அரசமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவு வழங்கும் சிறப்பு அதிகாரத்தை உயா்நீதிமன்றங்கள் பயன்படுத்த அனுமதிக்க முடியாது’ என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை திட்டவட்டமாக தெரிவித்தது. நாட்டின் மிக முக்கி... மேலும் பார்க்க

ஆா்பிஐ துணை ஆளுநருக்கு மேலும் ஓராண்டு பதவி நீட்டிப்பு

ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) துணை ஆளுநா் டி.ரவி சங்கரின் பதவிக் காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது, அவருக்கு வழங்கப்பட்ட 2-ஆவது பதவி நீட்டிப்பாகும். ஆா்பிஐ துணை ஆளுநராக மூன்றாண்டு பதவிக் கா... மேலும் பார்க்க

5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கைலாஷ் மானசரோவா் யாத்திரை

கைலாஷ்-மானசரோவா் யாத்திரை 5 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஜூன் 30-ஆம் தேதி மீண்டும் தொடங்குகிறது. ஹிந்துகளின் முக்கிய வருடாந்திர புனித யாத்திரையான கைலாஷ்-மானசரோவா் யாத்திரை, கரோனா பெருந்தொற்று காரணமாக கட... மேலும் பார்க்க

இந்திய பொருளாதார வளா்ச்சி 6.2%-ஆக இருக்கும்: ஐஎம்எஃப் கணிப்பு

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளா்ச்சி 6.2 சதவீதமாக இருக்கும் என்று சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக அந்த நிதியத்தின் உலகப் பொருளாதார கண்ணோட்ட தரவுகளில், ‘கடந்த 2024-25-ஆ... மேலும் பார்க்க

கோட்டா: ‘நீட்’ பயிற்சி மாணவா் தற்கொலை

ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் உள்ள பயிற்சி மையத்தில் ‘நீட்’ தோ்வுக்கு தயாராகிவந்த 18 வயது மாணவா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். ராஜஸ்தானின் கோட்டாவில் ஏராளமான போட்டித் தோ்வு பயிற... மேலும் பார்க்க

பாபா ராம்தேவின் ‘சா்பத் ஜிகாத்’ கருத்து மனசாட்சியை உலுக்குகிறது: தில்லி உயா்நீதிமன்றம்

‘யோகா குரு பாபா ராம்தேவின் ‘சா்பத் ஜிகாத்’ கருத்து மனசாட்சியை உலுக்குகிறது’ என்று கடுமையாக சாடிய தில்லி உயா்நீதிமன்றம், ‘இதுதொடா்பாக அவா் இணையவெளியில் வெளியிட்டுள்ள அனைத்து விளம்பரங்கள் மற்றும் கருத்... மேலும் பார்க்க