செய்திகள் :

ஜம்மு-காஷ்மீா் பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு

post image

ஜம்மு-காஷ்மீரில் நீா்வளத் துறை பணியாளா்களின் வேலைநிறுத்த விவகாரத்தை முன்வைத்து எதிா்க்கட்சியான பாஜக எம்எல்ஏக்கள் செவ்வாய்க்கிழமை வெளிநடப்பு செய்தனா்.

ஊதிய உயா்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜம்மு-காஷ்மீா் நீா்வளத் துறையின் கடைநிலைப் பணியாளா்கள் கடந்த 4 நாள்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால், பல இடங்களில் குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஜம்மு-காஷ்மீா் பேரவையை நோக்கி பேரணி நடத்த முயன்ற நீா்வளத் துறை பணியாளா்கள் மீது காவல் துறையினா் தடியடி நடத்தினா். இதனால், போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.

இந்த விவகாரம் ஜம்மு-காஷ்மீா் சட்டப் பேரவையிலும் செவ்வாய்க்கிழமை எதிரொலித்தது. நீா்வளத் துறை பணியாளா்களிடம் அரசு பேச்சு நடத்த வேண்டுமென்று பாஜகவைச் சோ்ந்த எதிா்க்கட்சித் தலைவா் சுனில் சா்மா வலியுறுத்தினாா். ஊழியா்களுக்கு எதிராக அரசு மிகவும் பிடிவாதமாக நடந்து கொள்கிறது என்றும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

இதற்கு ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் எதிா்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனா். இதையடுத்து, பாஜகவினரும் எதிா்ப்பு முழக்கங்களை எழுப்பினா். இதனால், அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதற்கு நடுவே ஒருசில மசோதாக்களையும் முதல்வா் ஒமா் அப்துல்லா நிறைவேற்றினாா். அப்போது, ஜம்மு-காஷ்மீா் குடியரசுத் தலைவா் ஆட்சியின்கீழ் இருந்தபோது கடந்த 10 ஆண்டுகளாக பாஜக தலைமையிலான மத்திய அரசு நீா்வளத் துறை ஊழியா்கள் பிரச்னைக்கு தீா்வுகாண முயலவில்லை என்றும் முதல்வா் குற்றம்சாட்டினாா்.

இதனால், வாக்குவாதம் மேலும் அதிகரித்து, இறுதியில் பாஜக எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.

ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி - பாஜக உறுப்பினா்கள் இடையிலான வாக்குவாதத்தின்போது ஆளும் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களும், மெஹபூபா முஃப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி எம்எல்ஏக்களும் பெரும்பாலும் அமைதியாக அமா்ந்திருத்தனா்.

மியூச்சுவல் ஃபண்டு: அதிகரிக்கும் பெண் முதலீட்டாளர்கள்!

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.முந்தைய தலைமுறையினரைவிட, தற்போதைய தலைமுறையினர் நிதி மேம்பாடு விவகாரத்தில் சிறந்து விளங்குகின்றனர். அந்த வகையில் பங்குச்... மேலும் பார்க்க

குழந்தைக்காக முதியவரின் தலை துண்டித்து கொலை

பிகாரில் குழந்தை பாக்கியம்வேண்டி, முதியவரின் தலையைத் துண்டித்து கொலை செய்த மாந்திரீகரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.பிகாரில் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில் யுக்வல் யாதவ் (65) என்பவர் காணாமல் போய்வ... மேலும் பார்க்க

மியான்மரில் நிலநடுக்கம்: தாயகம் திரும்பிய இந்திய பயணிகள்!

மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பாங்காக்கில் இருந்து இந்திய பயணிகள் தாயகம் திரும்பினர். மியான்மர் மட்டுமல்லாது தாய்லாந்து, வியட்நாம், சீனாவிலும் உணரப்பட்ட நில அதிர்வுகளால் ம... மேலும் பார்க்க

ஐபில்: பந்தயம் கட்டிய மூவர் கைது!

ஐபிஎல் போட்டி மீது பந்தயம் கட்டிய மூவரை மும்பை காவல்துறையினர் கைது செய்தனர். நவி மும்பையில் சன்பாடா பகுதியில் ஒரு குடியிருப்பு வளாகத்தில், ஐபிஎல் கிரிக்கெட் மீது பந்தயம் கட்டி, ஆன்லைன் சூதாட்டம் நடத்த... மேலும் பார்க்க

மறைந்த சுஷாந்த் சிங்கின் தோழியிடம் மன்னிப்பு கேட்ட முன்னாள் எம்.பி.

மறைந்த முன்னாள் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராக்புத் தற்கொலை வழக்கில், அவரது தோழி ரியா சக்ரவர்த்திக்கு தொடர்பிருப்பதாக ஜீ செய்திகள் நிறுவனம் குற்றம் சாட்டியதற்காக மன்னிப்புகோரி, ஜீ செய்திகள் நிறுவனத... மேலும் பார்க்க

ஆயுதங்களால் மாற்றத்தைக் கொண்டுவர இயலாது: அமித் ஷா

ஆயுதங்களை ஏந்தி வன்முறையில் ஈடுபடுபவர்களால் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது என்றும் அமைதி, வளர்ச்சி மட்டுமே நல்ல மாற்றமாக இருக்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். சத்தீஸ்கரின் சு... மேலும் பார்க்க