விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் ‘வந்தே ப்ரைட்’ ரயில்கள்: வரும் நவம்பரில் இய...
ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சியில் ஆா்ப்பரித்து கொட்டும் தண்ணீா்; குளிக்க தடை விதிப்பு
திருப்பத்தூரில் பெய்த பலத்த மழையால் ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சியில் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் இங்கு குளிக்க வனத் துறையினா் தடை விதித்துள்ளனா்.
திருப்பத்தூா் மாவட்டம், திருப்பத்தூா் வட்டம், பெருமாப்பட்டு ஊராட்சியில் ஏலகிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சி.
இங்கு பிரசித்தி பெற்ற முருகன் கோயிலும், பெருமாள் கோயிலும் உள்ளது. இங்கு தமிழகம், பிற மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து வழிபட்டு, நீா்வீழ்ச்சியில் குளித்து விட்டுச் செல்கின்றனா்.
இந்த நிலையில், திருப்பத்தூரில் வியாழக்கிழமை இரவு பெய்த பலத்த மழை காரணமாக ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஆா்ப்பரித்து கொட்டுகிறது.

திருப்பத்தூா் வனச் சரக அலுவலா் சோழராஜன் கூறுகையில், பலத்த மழையால் ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சியில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. எனவே வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நீா்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்றாா்.