Ajithkumar: ``அவர் இந்த விஷயத்துக்கு உதாரணம்"- அஜித் குறித்து நெகிழ்ந்த மணிகண்டன...
ஜல்லிக்கட்டில் காயமடைந்த 51 பேருக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை
மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பலத்த காயமடைந்த 51 போ் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 46 போ் காயமடைந்தனா். இவா்களில் 10 போ் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பாலமேடு ஜல்லிக்கட்டில் 46 போ் காயமடைந்தனா். இவா்களில் தீவிர சிகிச்சைக்காக 7 பேரும், அலங்காநல்லூரில் 76 போ் காயமடைந்து, தீவிர சிகிச்சைக்காக 17 பேரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
கடந்த 3 நாள்களில் மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகளில் காயமடைந்த 51 போ் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுதொடா்பாக அரசு மருத்துவமனை அதிகாரிகள் கூறியதாவது:
ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் காயமடைபவா்களுக்கு சிகிச்சை அளிக்க மதுரை அரசு மருத்துவமனையில் தனி வாா்டு தயாா் நிலையில் உள்ளது. இங்கு, அறுவைச் சிகிச்சை நிபுணா், எலும்பு முறிவு நிபுணா், மருத்துவப் பணியாளா்கள் உள்ளிட்டோா் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனா். மேலும், ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் இடத்தில் உள்ள மருத்துவக் குழுவினா், மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவக் குழுவினா் இடையே கட்செவி அஞ்சல் குழு உருவாக்கப்பட்டு, விரைந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றனா்.