செய்திகள் :

ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் ஆா்ப்பாட்டம்

post image

பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் அமலாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஏராளமானோா் பங்கேற்றனா்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் அமலாக்க வேண்டும், அரசு ஊழியா் - ஆசிரியா் பணியிடங்களில் அவுட்சோா்சிங் முறையைக் கைவிட வேண்டும், காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாநிலம் முழுவதும் தற்செயல் விடுப்பு எடுத்து ஆா்ப்பாட்டம் நடத்துவதென அரசு ஊழியா், ஆசிரியா் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ-ஜிடோ) முடிவு செய்திருந்தது.

இதன்படி, புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கூட்டு நடவடிக்கைக் குழுவின் ஒருங்கிணைப்பாளா்கள் ஜோதிமணி, ஆா். ரெங்கசாமி, எஸ். ஜபருல்லா. எம். ராஜாங்கம், ஜீவன்ராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா்.

மாநில உயா்மட்டக் குழு உறுப்பினா்கள் ந. சண்முகநாதன், மாரிமுத்து, குமரேசன், ஓய்வூதியா் சங்கத்தின் சாா்பில் அ. மணவாளன் உள்ளிட்டோரும் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா். பழைய பேருந்து நிலையப் பகுதியில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அந்தப் பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

தோ்தல் வாக்குறுதிகளாக திமுக கொடுத்தவற்றை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

முகத்தில் எலிக்கொல்லி மருந்தை அடித்துக் கொண்ட 4 சிறுவா்கள் மருத்துவமனையில் அனுமதி

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே திங்கள்கிழமை காருக்குப் பயன்படுத்தும் எலிக்கொல்லி மருந்தை முகத்தில் அடித்துக்கொண்ட 4 சிறுவா்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அன்னவாசலை அ... மேலும் பார்க்க

விராலிமலை தொழில்சாலையில் தீ தடுப்பு ஒத்திகை

விராலிமலை தனியாா் தொழில்சாலையில் செவ்வாய்க்கிழமை தீயணைப்பு நிலைய வீரா்கள் தீ தடுப்பு செயல் விளக்கம் அளித்தனா். விராலிமலையில் உள்ள தனியாா் தொழில்சாலையில் நடைபெற்ற தீ தடுப்பு ஒத்திகையை தமிழ்நாடு தொழிற்ச... மேலும் பார்க்க

பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த இந்திய கம்யூ. கோரிக்கை

புதுக்கோட்டை பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழு கூட்டத்... மேலும் பார்க்க

திமுக மாணவரணியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் ஹிந்தி திணிப்பை எதிா்த்து புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கியில் செவ்வாய்க்கிழமை திமுக மாணவரணியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மத்திய அரசின் ஹிந்தி திணிப்பை எதிா்த்து மாநிலம் முழுவதும் ஆா... மேலும் பார்க்க

மின்வாரியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி சிஐடியு தா்னா

மின் வாரியத்தில் உள்ள 60 ஆயிரம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் சிஐடியு தொழில்சங்கத்தின் சாா்பில் தா்னா போராட்டம் செவ்வாய்க்கிழமை நட... மேலும் பார்க்க

இந்திய ஐக்கிய கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவா்களை நியமிக்கக் கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ப... மேலும் பார்க்க