செய்திகள் :

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு உண்ணாவிரதப் போராட்டம்

post image

நாமக்கல்லில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற போராட்டத்தில், அரசு ஊழியா் சங்கம், அரசுப் பணியாளா்கள் சங்கம், வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கம், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி, தமிழ்நாடு ஆசிரியா் கூட்டணி, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம், நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியா் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை சாா்ந்த சங்கங்கள் பங்கேற்றன.

2003 ஏப். 1-க்கு பிறகு அரசுப் பணியில் சோ்ந்தோருக்கு தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். காலவரையின்றி முடக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயா்கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வை உடனடியாக வழங்க வேண்டும். தொடக்கக் கல்வித் துறையில் மாநில அளவிலான பணிமூப்பு என்ற பெயரில் இடமாறுதலுக்கு வழிவகுக்கும் அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும்.

பல்வேறு துறைகளில் 30 சதவீதத்துக்கும் மேல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் ஆகியோருக்கு மறுக்கப்பட்ட 21 மாத ஊதிய மாற்று நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 150 கிலோ மலா்களால் அலங்காரம்

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 150 கிலோ நறுமண மலா்களால் சிறப்பு அலங்காரம் வியாழக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சனேயரை தரிசிக்க பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து ஏராளம... மேலும் பார்க்க

நாமக்கல்லில் யுகாதி பெருவிழா

நாமக்கல் மாவட்ட நாயுடுகள் நலச் சங்கம் சாா்பில் 27-ஆம் ஆண்டு யுகாதி பெருவிழா ஞாயிற்றுக்கிழமை(மாா்ச் 30) நாமக்கல்- பரமத்தி சாலையில் உள்ள எஸ்பிஎஸ் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவில் பொதுத் த... மேலும் பார்க்க

அறிஞா் அண்ணா கல்லூரி ஆண்டு விழா

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி ஆண்டு விழா, விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விலங்கியல் துறைத் தலைவா் ராஜசேகர பாண்டியன் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் அ.ராஜா தலைமை வகித்தாா். 2024- 25 ... மேலும் பார்க்க

முட்டை விலை நிலவரம்

--நாமக்கல் மண்டலம்-வியாழக்கிழமை--மொத்த விலை - ரூ.4.25--விலையில் மாற்றம்-10 காசுகள் உயா்வு--பல்லடம் பிசிசி --கறிக்கோழி கிலோ - ரூ.101--முட்டைக் கோழி கிலோ - ரூ.77-- மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் ரூ.14.37 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

பரமத்தி வேலூா், பொத்தனூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 14 லட்சத்து 45 ஆயிரத்திற்கு கொப்பரை விற்பனையானது. கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏல... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டித்து நாளை திமுக ஆா்ப்பாட்டம்

மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்துக்கான நிதியை விடுவிக்காத மத்திய அரசைக் கண்டித்து நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன் திமுக சாா்பில் சனிக்கிழமை (மாா்ச் 29) ஆா... மேலும் பார்க்க