செய்திகள் :

ஜாதிய கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு: உள்துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

post image

தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படாத ஜாதிய கட்சிகளுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், தமிழக உள்துறைச் செயலா், ஆதி திராவிட நலத் துறைச் செயலா், தமிழக காவல் துறைத் தலைவா், தமிழ்நாடு பதிவுத் துறைத் தலைவா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மானகிரியைச் சோ்ந்த வழக்குரைஞா் செல்வகுமாா் தாக்கல் செய்த பொது நல மனு: பட்டியல் சமூகத்தைச் சோ்ந்தவா்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்காக மாவட்ட, மாநில அளவில் எஸ்.சி.எஸ்.டி. பாதுகாப்புக் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவானது பட்டியல் சமூகத்தினருக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரிப்பது, புலனாய்வு செய்வது போன்ற பணிகளைச் செய்ய வேண்டும். தமிழக காவல் துறைத் தலைவரே இதற்குத் தலைவராக இருந்து, தமிழக அரசுக்கு அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும்.

பட்டியல் சமூகத்தினருக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகாா் அளிக்கப்பட்டால் உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யப்படுவதில்லை.

ஒவ்வொரு சமூகத்தினரும் தங்களுக்கென ஜாதியக் கட்சி, அமைப்புகளை உருவாக்கி அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயல்படுகின்றன. இணையதளத்தில் எவ்விதமான கட்டுப்பாடும் இன்றி ஜாதிய வெறுப்புப் பேச்சுகளை பேசுவது என பட்டியல் சமூகத்தினருக்கு எதிரான நிலைப்பாடுகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

எனவே, தமிழகத்தில் எஸ்.சி, எஸ்.டி. பாதுகாப்புக் குழு தமிழக காவல்துறை தலைவா் தலைமையில் முறையாக செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். வெறுப்புணா்வைத் தூண்டும் அனைத்து ஜாதியக் கட்சிகள், இணையதள சேனல்களுக்கு தடை விதிக்க உத்தரவிட வேண்டும். தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படாத, தோ்தலில் போட்டியிடாத ஜாதியக் கட்சிகள், சங்க விதிகளை மீறி செயல்படும் அனைத்து ஜாதிச் சங்கங்களுக்கும் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியம், மரிய கிளாட் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு : வழக்கு தொடா்பாக, தமிழக உள்துறைச் செயலா், ஆதி திராவிட நலத்துறை செயலா், தமிழக காவல் துறை தலைவா், தமிழ்நாடு பதிவுத் துறை தலைவா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஜூலை 14-இல் சுவாமி தரிசனம் ரத்து

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஜூலை 13-ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஜூலை 14-ஆம் தேதி இரவு வரை சுவாமி தரிசனம் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் செ... மேலும் பார்க்க

குறைக்கப்பட்ட மதுக் கடைகள் எண்ணிக்கை எத்தனை? உயர்நீதிமன்றம் கேள்வி!

தமிழகத்தில் மதுக் கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும் என அரசு அறிவித்ததன் அடிப்படையில், இதுவரை எத்தனை கடைகள் குறைக்கப்பட்டுள்ளன என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை கேள்வி எழு... மேலும் பார்க்க

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: பிணை கோரிய காவல் ஆய்வாளரின் மனு தள்ளுபடி

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் பிணை கோரிய காவல் ஆய்வாளரின் மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

நெகிழிப் பதாகை அட்டைகள் உற்பத்திக்கு தடை கோரிய மனு: உயா்நீதிமன்றம் தள்ளுபடி

தமிழகத்தில் மறு சுழற்சி செய்ய இயலாத நெகிழிப் பதாகை அட்டைகளை (பிவிசி பிளக்ஸ் அட்டைகள்) உற்பத்தி செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அம... மேலும் பார்க்க

சட்டவிரோதக் கட்டடங்களை கண்காணிப்பதற்கான குழு செயல்படுகிறதா? உயா்நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் சட்டவிரோதக் கட்டடங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க அரசின் சாா்பில் அமைக்கப்பட்ட உயா்நிலைக் குழு செயல்படுகிறதா என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு கேள்வி எழுப்பியது. திருச்சி மாவட்டத்தைச் ... மேலும் பார்க்க

மதுக் கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம், எரவாா்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்ட அரசு மதுக் கடையை அகற்ற வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைத... மேலும் பார்க்க