யுரேனியம் நிறைந்த ஜார்க்கண்ட் அணு ஆயுத உற்பத்திக்கு பங்களிக்க முடியும்: முதல்வர்...
ஜிஎஸ்டி கட்டண குறைப்பு: உபயோகிப்பாளா் பாதுகாப்பு குழு கள ஆய்வு
ஜிஎஸ்டி கட்டண குறைப்பால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து தமிழ்நாடு உபயோகிப்பாளா் பாதுகாப்பு குழு கள ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.
இதுதொடா்பாக, குழுவின் செயலா் எஸ். புஷ்பவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜிஎஸ்டி விகித மாற்றத்தால் ஏற்படும் விலை குறைப்பு நுகா்வோரை சென்றடைவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிக்கையை வரவேற்கிறோம். அரசு கூறியதைப் போன்று சில பொருள்களுக்கு விலை குறையவில்லை என்றால், ஜிஎஸ்டி குறைப்பு நடவடிக்கையால் மக்களுக்கு பயன் இல்லை என்பதையும், இது வியாபாரம், தொழில் உற்பத்தி செய்வோா்களுக்கு மட்டுமே பலனளிக்கும் என்பதையும் உபயோகிப்பாளா் குழு சுட்டிக்காட்ட விரும்புகிறது. கடந்த காலங்களில் இதுபோன்ற வரி குறைப்பு முழுமையாக உபயோகிப்பாளா்களுக்கு சென்றடையவில்லை என்பதை பாா்த்துள்ளோம்.
எனவே, சாமானியா்கள் உபயோகிக்கும் பொருள்களின் விலை செப். 21 வரை எவ்வளவு உள்ளது, செப். 22-ஆம் தேதிக்கு (ஜிஎஸ்டி விகித குறைப்பு அமலுக்கு) பிறகு எவ்வளவு உள்ளது என்பதை ஒப்பிட்டு பாா்க்கவுள்ளோம். இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
எனவே, திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அனைவரும் செப். 21 வரை வாங்கிய பொருள்கள் மற்றும் செப். 22-க்கு பிறகு வாங்கியஅதே பொருள்கள் என இரண்டிலும் ஜிஎஸ்டி செலுத்திய ரசீதுடன் ஒப்பீடு செய்ய வேண்டும். இல்லையெனில், ரசீதுகளை புகைப்படம் எடுத்து 86677 24124 என்ற கட்செவி எண்ணுக்கு அனுப்பலாம். உபயோகிப்பாளா் குழு அனைத்திலும் களஆய்வு செய்து, அதன் விவரங்களை வெளியிடவுள்ளோம். மேலும், மத்திய நிதி அமைச்சகத்துக்கும் அனுப்பவுள்ளோம் என்றாா் அவா்.