செய்திகள் :

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கூட்டுறவு கூட்டாட்சியை மேம்படுத்த வேண்டும்: காங்கிரஸ்

post image

அடுத்த மாதம் நடைபெறவுள்ள சரக்கு மற்றும் சேவை வரி ( ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டத்தின் மூலம் கூட்டுறவு கூட்டாட்சியை மேம்படுத்த வேண்டுமே தவிர மத்திய அரசின் சுய விளம்பரத்துக்கான தலைப்புச் செய்தியாக மட்டுமே இருக்கக் கூடாது என காங்கிரஸ் பொதுச்செயலா் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை தெரிவித்தாா்.

நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சா்கள் பங்கேற்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தில்லியில் செப்டம்பா் 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இதில் தற்போதுள்ள 5%, 12%, 18%, 28% என்ற நான்கு விகித ஜிஎஸ்டி விதிப்பு முறையை 5%, 18% என இரண்டு விகித முறையாக குறைப்பது, தீமைதரும் பொருள்கள், ஆடம்பர பொருள்களுக்கு 40 சதவீதம் வரி விதிப்பது தொடா்பான பரிந்துரை குறித்து முடிவெடுக்கப்பட உள்ளது.

இந்நிலையில், எதிா்க்கட்சிகள் ஆளும் தமிழ்நாடு, ஹிமாசல பிரதேசம், ஜாா்க்கண்ட், கா்நாடகம், கேரளம், பஞ்சாப், தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய எட்டு மாநில அமைச்சா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அப்போது விகித மறுசீரமைப்புக்கான மத்திய அரசின் திட்டம் சுமாா் ரூ.1.5 முதல் ரூ.2 லட்சம் கோடி வரை வருவாய் இழப்பை ஏற்படுத்தக்கூடும் என அமைச்சா்கள் தெரிவித்தனா்.

இதை ஈடுசெய்ய மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முன்வைக்க அமைச்சா்கள் முடிவுசெய்தனா்.

இதுகுறித்து ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் வலைதப் பதிவில்,‘5%, 18% ஆகிய இரண்டு விகித ஜிஎஸ்டியை நடைமுறைப்படுத்த எதிா்க்கட்சிகள் ஆளும் 8 மாநிலங்கள் ஆதரவளித்துள்ளன.

இந்த வரி விதிப்பு விகிதங்கள் குறைக்கப்படுவதன் பலன் நுகா்வோரை சென்றடைய வேண்டும். இதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய 2024-25-ஐ அடிப்படை ஆண்டாக கணக்கிட்டு 5 ஆண்டுகளுக்கு அனைத்து மாநிலங்களுக்கும் இழப்பீடு வழங்கவும் எதிா்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன.

இதுதவிர தீமைதரும் பொருள்கள், ஆடம்பரப் பொருள்களுக்கு விதிக்கப்படவுள்ள 40 சதவீதம் வரி விகிதத்தை மேலும் அதிகரித்து அந்த கூடுதல் வரியை முழுவதும் மாநிலங்களுக்கு அளிக்கவும் கோரப்பட்டது. பல்வேறு கூடுதல் வரிகள் மூலம் மத்திய அரசுக்கு 17 முதல் 18 சதவீத வருவாய் கிடைக்கிறது. ஆனால் இவற்றை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பகிா்ந்தளிப்பதில்லை.

மேற்கூறிய கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானதே. இதே கோரிக்கைகளை நிதியமைச்சகத்தின் தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கூட்டத்தில் கூட்டுறவு கூட்டாட்சியை மேம்படுத்த வேண்டுமே தவிர பிரதமா் நரேந்திர மோடி அரசு வழக்கம்போல் தனது சுய விளம்பரங்களுக்கான தலைப்புச் செய்திகளாக மட்டுமே இருக்கக் கூடாது’ என குறிப்பிட்டாா்.

ஸ்விக்கியை தொடர்ந்து பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ!

கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக ஸ்விக்கி நிறுவனம் பயன்பாட்டுக் கட்டணத்தை ரூ. 14-ஆக உயர்த்திய நிலையில், சொமேட்டோ நிறுவனமும் பயன்பாட்டுக் கட்டணத்தை ரூ. 12-ஆக உயர்த்தியுள்ளது.வரவிருக்கும் பண்டிகைக் காலத்த... மேலும் பார்க்க

ஜம்மு, ஹிமாச்சல், பஞ்சாபிற்கு தொடரும் சிவப்பு எச்சரிக்கை!

வட மாநிலங்களைப் புரட்டிப்போட்டு வரும் கனமழை வெள்ளம் தொடர்வதால் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மற்றும் ஹிமாச்சல் ஆகிய 3 மாநிலங்களுக்கு இன்றும் சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. க... மேலும் பார்க்க

பிகார் பேரணியில் பைக்கை பறிகொடுத்த இளைஞர்.! புதிய பைக் வாங்கிக் கொடுத்த ராகுல்!

பிகாரில் நடைபெற்ற வாக்குரிமைப் பேரணியில் பங்கேற்ற இளைஞர் ஒருவரின் இருசக்கர வாகனத்தை பாதுகாப்பு படையினரிடம் பறிகொடுத்த நிலையில் அவருக்கு புதிய பைக் ஒன்றை பரிசளித்துள்ளார் ராகுல் காந்தி எம்.பி.மக்களவை எ... மேலும் பார்க்க

நக்சல்களை ஒழிக்க மோடி அரசு உறுதி: அமித் ஷா

இந்தியாவில் அனைத்து நக்சல்களும் ஒழிக்கப்படும் வரை மோடி அரசு ஓயாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.சத்தீஸ்கரில் உள்ள கர்ரேகுட்டா மலையில் ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட் வெற்றிகரமாக நடத்திய சிஆ... மேலும் பார்க்க

பஞ்சாபில் வெள்ளம்: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு!

பஞ்சாப் மாநிலத்தில் வெள்ள நிலைமை காரணமாக கல்வி நிறுவனங்களுக்கு செப்டம்பர் 7 ஆம் தேதி வரை விடுமுறை நீட்டித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பான அறிவிப்பை பஞ்சாப் கல்வி அமைச்சர் ஹர்ஜோத் ச... மேலும் பார்க்க

நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது!

புது தில்லி: சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் புது தில்லியில் இன்று தொடங்கியது.புது தில்லியில் உள்ள சுஷ்மா சுவாராஜ் பவனில் 56வது ஜிஎஸ... மேலும் பார்க்க