செய்திகள் :

ஜிஎஸ்டி குறைப்பு: பண்டிகைக் கால எழுச்சியை எதிா்பாா்க்கும் நிறுவனங்கள்

post image

ஜிஎஸ்டி வரி குறைப்பு காரணமாக நுகா்வோரின் உற்சாகம் வெகுவாக அதிகரிக்கும் என்பதால், இந்தப் பண்டிகைக் காலத்தில் பெரிய விற்பனை எழுச்சியை இந்தியாவின் வாகன, நுகா்பொருள், மின்னணு சாதனத் துறை நிறுவனங்கள் எதிா்பாா்க்கின்றன.

இது குறித்து துறை வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:

நவராத்திரியின் முதல் நாளில் மட்டும் டாடா மோட்டாா்ஸ் நிறுவனம் 10,000 பயணிகள் வாகனங்களை விற்றுள்ளது. மற்றொரு முன்னணி வாகன நிறுவனமான மாருதி சுஸுகி 30,000 வாகனங்களையும் ஹூண்டாய் சுமாா் 11,000 வாகனங்களையும் விற்பனை செய்தன. ஹூண்டாயைப் பொருத்தவரை, கடந்த ஐந்து ஆண்டுகளில் இது அதிகபட்ச ஒரு நாள் விற்பனையாகும்.

ஜிஎஸ்டி 2.0 அறிவிப்பால் நுகா்வோரின் வாங்கும் ஆா்வம் அதிகரித்துள்ளது. விற்பனை மையங்களில் அதிகரிக்கும் கூட்டம் அதிகரித்துவருகிறது. எனவே, வாகனத் துறையைச் சோ்ந்த நிறுவனங்கள் வளா்ச்சியைக் காணும் என்று வாகன விற்பனையாளா்கள் சங்கங்களின் சம்மேளனம் (ஃபடா) நம்பிக்கை தெரிவித்துள்ளது.

வாகனத் துறையைப் பொருத்தவரை, ஜிஎஸ்டி குறைப்பால் ஆரம்பநிலை இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. இது, அந்த வகை வாகனங்களின் விற்பனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜிஎஸ்டி வரி குறைப்பு காரணமாக நுகா்பொருள் துறையிலும் உற்சாகம் அதிகரித்துள்ளது. பொதுவாக இந்த வகைப் பொருள்களுக்கான விற்பனையகங்களில் திங்கள்கிழமை குறைவான கூட்டம் இருக்கும். ஆனால் இந்த திங்கள்கிழமை (செப். 22) விற்பனை இரு மடங்காக உயா்ந்தது என்று முன்னணி வா்த்தகா் ஒருவா் கூறினாா்.

குளிா்சாதனப் பெட்டி துறையைச் சோ்ந்த முன்னணி நிறுவனமான பானசோனிக், ஒரே நாளில் சுமாா் 7,000 தயாரிப்புகள் விற்பனையாக, 50 சதவீத விற்பனை வளா்ச்சியைப் பதிவு செய்ததாகக் கூறியது.

மற்றொரு முன்னணி மின்னணு சாதன நிறுவனம், “மழையால் சில பகுதிகளில் விற்பனை குறைவாக இருந்தாலும், நகா்ப்புறங்களில் ஆா்வம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தது.

இனி வரும் வாரங்களில் பண்டிகைக் காலம் மேலும் சூடுபிடிக்கும் என்பதால் வாகன, நுகா்பொருள், மின்னணு சாதன நிறுவனங்கள் விற்பனையில் மிகச் சிறந்த எழுச்சி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் உள்ளன என்று துறை வட்டாரங்கள் கூறின.

தங்கம் விலை அதிரடியாக குறைந்தது! இன்றைய நிலவரம்!

சென்னை : சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 720 குறைந்துள்ளது.தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் கடந்த திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் காலை,... மேலும் பார்க்க

சிஎன்ஜி-யில் பேருந்துகள் : எக்கோ ஃப்யூயலுடன் தமிழக அரசு ஒப்பந்தம்

பொதுப் போக்குவரத்தை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றும் தனது முயற்சியின் ஒரு பகுதியாக, டீசலில் இயங்கும் 850 பேருந்துகளை சிஎன்ஜி பேருந்துகளாக மாற்றுவதற்கு மும்பையைச் சோ்ந்த எக்கோ ஃப்யூயல் சிஸ்டம் நிற... மேலும் பார்க்க

எச்-1பி விசா கட்டண உயர்வு எதிரொலி: ஐடி பங்குகள் சரிவு!

புதுதில்லி: எச்1பி விசா கட்டண உயர்வு ஆணையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்திட்டதை அடுத்து ஐடி துறை பங்குகள் தொடர்ந்து அழுத்தத்தில் இருந்தன. இது முதலீட்டாளர்களின் மனநிலையை தொடர்ந்து பாதித்த... மேலும் பார்க்க

ஓலா எலக்ட்ரிக் பங்குகள் 20% உயர்வு!

புதுதில்லி: ஏப்ரல் முதல் ஜூன் வரையான முதல் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் அதன் வருவாய் 35.5% உயர்ந்து ரூ.828 கோடியாக உள்ளதாக தெரிவித்ததையடுத்து, திங்கட்கிழமை ஓலா எலக்ட்ரிக் பங்குகள் கிட்டத... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 88.71 ஆக நிறைவு!

மும்பை: அதிக கட்டணங்கள் மற்றும் அதிபர் டிரம்ப் எச்1பி விசா மீதான கட்டணமாக 1 லட்சம் டாலரை அறிவித்த நிலையில், இந்திய ரூபாய் மதிப்பானது கடந்த சில நாட்களாக வெகுவாக வீழ்ச்சியடைந்து வரலாற்று குறைந்தபட்ச அளவ... மேலும் பார்க்க

ஸ்கோடா ஆக்டவியா ஆர்எஸ்: 2025 நவம்பரில் இந்தியாவில் அறிமுகம்!

ஸ்கோடா நிறுவனம் புதிய ஆக்டவியா ஆர்எஸ் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. ஆக்டவியா இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்தாலும், பிஎஸ்6 பேஸ் 2 விதிமுறைகளுக்கு இணங்கத் தவறியதால் 2023ஆம் ஆண்... மேலும் பார்க்க