செய்திகள் :

ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடியாக அதிகரிப்பு!

post image

புதுதில்லி: உள்நாட்டு வருவாய் அதிகரித்ததன் காரணமாக ஜூலை மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 7.5 சதவிகிதம் அதிகரித்து சுமார் ரூ.1.96 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

2024 ஜூலையில் மொத்த சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ரூ.1.82 லட்சம் கோடியாக இருந்தது. இதுவே கடந்த மாதம் ரூ.1.84 லட்சம் கோடியாகயாக இருந்தது.

மொத்த உள்நாட்டு வருவாய் 6.7 சதவிகிதம் அதிகரித்து ரூ.1.43 லட்சம் கோடியாக இருந்தது. அதே நேரத்தில் இறக்குமதி வரி 9.5 சதவிகிதம் அதிகரித்து ரூ.52,712 கோடியாக உள்ளது.

ஜிஎஸ்டி பணத்தைத் திரும்பப் பெறுதல் ஆண்டுக்கு ஆண்டு 66.8 சதவிகிதம் அதிகரித்து ரூ.27,147 கோடியாக உள்ளது.

ஜூலை 2025ல் நிகர ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.69 லட்சம் கோடியாக இருந்தது. இது ஆண்டுக்கு ஆண்டு 1.7 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது.

இரு சக்கர வாகன விற்பனை: மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு

கடந்த ஜூன் காலாண்டின் இரு சக்கர வாகன விற்பனையில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. இது குறித்து இந்திய வாகன உற்பத்தியாளா்கள் சங்கம் (சியாம்) வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு... மேலும் பார்க்க

பந்தன் வங்கிக்கு ரூ.44.70 லட்சம் அபராதம் விதிப்பு: ரிசர்வ் வங்கி

மும்பை: சில சட்டரீதியான மற்றும் ஒழுங்குமுறை இணக்கக் குறைபாடுகளுக்காக ரிசர்வ் வங்கி பந்தன் வங்கிக்கு ரூ.44.7 லட்சம் அபராதம் விதித்துள்ளது.மார்ச் 31, 2024 நிலவரப்படி பந்தன் வங்கியின் மேற்பார்வை மதிப்பீட... மேலும் பார்க்க

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு!

புதுதில்லி: அமெரிக்கா வரி விதிக்கப்படுவதற்கு முன்பு, முதல் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8 சதவிகிதம் வளர்ச்சியடைந்தாக தெரிவிப்பு.நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 61 காசுகள் சரிந்து ரூ.88.19 ஆக நிறைவு!

மும்பை: டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு முதன் முறையாக 88ஐ தாண்டி 88.19 ஆக சரிந்துள்ளது. இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்த பதட்டங்கள் அதிகரித்ததன் மத்தியில் 61 காசுகள் சரிவைப் பதிவு செய்தது இந்திய... மேலும் பார்க்க

செப். 9-ல் ஐஃபோன் 17 அறிமுகம்! விலை குறையும் பழைய ஐஃபோன் மாடல்கள்!!

ஆப்பிள் நிறுவனம், அதன் அடுத்த தலைமுறை ஐஃபோன் 17-ஐ செப்டம்பர் 9ஆம் தேதி அறிமுகப்படுத்துவதை உறுதி செய்துவிட்டது.ஒவ்வொரு ஆண்டும், ஆப்பிள் நிறுவனம், அதன் புதிய தலைமுறை ஐஃபோனை அறிமுகம் செய்வது மட்டும் இந்த... மேலும் பார்க்க

24,426 புள்ளிகளாக சரிந்த நிஃப்டி; சென்செக்ஸ் 80,000 புள்ளிகளுக்குக் கீழே நிறைவு!

மும்பை: இன்றைய பங்குச் சந்தையில் எதிர்மறையான தொடக்கம் இருந்தபோதிலும், சந்தை பெரும்பாலான நேரங்களில் நேர்மறையான வர்த்தகத்திலும் வர்த்தகமானது. இன்றைய இறுதி நேர விற்பனை அழுத்தத்தின் மத்தியில், சென்செக்ஸ் ... மேலும் பார்க்க