பசிபிக் கடலின் மிக ஆழத்தில் 4 கருப்பு முட்டைகள்.. உள்ளே இருந்த அதிசயம்!
ஜூலை 16ல் திருவண்ணாமலையில் அதிமுக ஆர்ப்பாட்டம்!
திருவண்ணாமலையில் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அறநிலையத் துறையைக் கண்டித்து வருகிற ஜூலை 16 ஆம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
திமுக அரசின் நிர்வாக சீர்கேடுகளைக் கண்டித்து திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் ஜூலை 16 ஆம் தேதி காலை 10 மணிக்கு திருவண்ணாமலை நகராட்சி அண்ணா சிலை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் சீர்கேடுகளைக் கண்டித்தும் திருவண்ணாமலை நகராட்சியின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையிலும் முன்னாள் அமைச்சர் எஸ்.ராமச்சந்திரன் முன்னிலையிலும் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.