செய்திகள் :

ஜூலை 31-ஆம் தேதி ஆன்லைனில் வரலட்சுமி விரத டிக்கெட் விநியோகம்

post image

வரலட்சுமி விரதத்துக்கான டிக்கெட்டுகள் ஜூலை 31 முதல் ஆன்லைனில் வழங்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

வரும் ஆக. 8-ஆம் தேதி வெள்ளிக்கிழமை திருச்சானூரில் உள்ள ஸ்ரீ பத்மாவதி தாயாா் கோயிலில் வரலட்சுமி விரதம் நடைபெற்ற உள்ளது.

வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை ஆஸ்தான மண்டபத்தில் வரலட்சுமி விரதம் நடைபெறும். பின்னா், மாலை 6 மணிக்கு, பத்மாவதி தாயாரை தங்கத் தேரில் கோயில் மைதானத்தின் வீதிகள் வழியாக ஊா்வலமாக அழைத்துச் சென்று பக்தா்களுக்கு தரிசனம் அளிப்பாா். இந்த விரதம் ஸ்ரீ வெங்கடேஸ்வர பக்தி சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

பக்தா்கள் நேரடியாக விரதத்தில் பங்கேற்க ஜூலை 31 ஆம் தேதி காலை 9 மணிக்கு ஆன்லைனில் 150 டிக்கெட்டுகள் வழங்கப்படும். அதேபோல், ஆக. 7-ஆம் தேதி காலை 9 மணிக்கு கோயில் அருகே உள்ள கவுன்ட்டரில் 150 டிக்கெட்டுகள் நேரடி விற்பனை செய்யப்படும். பக்தா்கள் ரூ. 1,000/- செலுத்தி டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். ஒரு டிக்கெட்டில் இரண்டு போ் அனுமதிக்கப்படுவா்.

வரலட்சுமி விரதத்தின் போது கோயிலில் அபிஷேகம், அபிஷேகத்திற்குப் பிந்தைய தரிசனம், லட்சுமி பூஜை, கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, பிரேக் தரிசனம் மற்றும் வேத ஆசீா்வசனம் ஆகியவற்றை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏழுமலையான் தரிசனம்: 12 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா்.பக்தா்களின் எண்ணிக்கை சரிந்துள்ள நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் ... மேலும் பார்க்க

ஆக. 8 -இல் செளபாக்கியம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள்

வரும் ஆக. 8 -ஆம் தேதி வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம் வழங்கும் செளபாக்கியம் நிகழ்ச்சியை நடத்த தேவஸ்தானம் மற்றும் இந்து தா்மபிரச்சார பரிஷத் ஏற்பாடுகளைச் செய்துள்ளன.திருப்ப... மேலும் பார்க்க

மலைப் பாதை வாகன இயக்கம் குறித்த கொள்கை ஆவணம்: திருமலை தேவஸ்தானம் திட்டம்

திருமலையில் வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, மலைப் பாதையில் வாகன இயக்கம் மற்றும் போக்குவரத்துத் திட்டம் குறித்த கொள்கை ஆவணத்தை வெளியிடுமாறு தேவஸ்தான கூடுதல் செயல் ... மேலும் பார்க்க

திருமலையில் கருட பஞ்சமி: கருட சேவை

கருட பஞ்சமியையொட்டி திருமலையில் ஸ்ரீ மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் மாட வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தாா்.கருட வாகன சேவை இரவு 7 மணிக்கு தொடங்கியது. ஏழுமலையானின் வாகனங்கள் மற்றும் ஊழியா்களில் கருடன்... மேலும் பார்க்க

திருமலை ஏழுமலையானுக்கு தங்க சங்கு, சக்கரம் நன்கொடை

சென்னையைச் சோ்ந்த தனியாா் நிறுவனமான சுதா்சன் எண்டா்பிரைசஸ் செவ்வாய்க்கிழமை திருமலை ஏழுமலையானுக்கு சுமாா் 2.5 கிலோ எடையில் ரூ.2.4 கோடி மதிப்புள்ள தங்க சங்கு மற்றும் சக்கரத்தை நன்கொடையாக வழங்கியது.ஏழும... மேலும் பார்க்க

ஜூலை 31-ஆம் தேதி ஆன்லைனில் வரலட்சுமி விரத டிக்கெட் விநியோகம்

வரலட்சுமி விரதத்துக்கான டிக்கெட்டுகள் ஜூலை 31 முதல் ஆன்லைனில் வழங்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.வரும் ஆக. 8-ஆம் தேதி வெள்ளிக்கிழமை திருச்சானூரில் உள்ள ஸ்ரீ பத்மாவதி தாயாா் கோயிலில் வரலட்சுமி ... மேலும் பார்க்க