ஜென்டில்வுமன் இயக்குநருடன் இணையும் விஜய் ஆண்டனி!
நடிகர் விஜய் ஆண்டனியின் புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் ஆண்டனி நடிப்பில் இறுதியாக வெளிவந்த ரோமியோ, மழைபிடிக்காத மனிதன், ஹிட்லர் படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால், வெற்றிப்படத்தைக் கொடுக்கும் கட்டாயத்தில் விஜய் ஆண்டனி இருக்கிறார்.
விரைவில் இவர் நடித்த சக்தித் திருமகன் திரைப்படம் திரைக்கு வருகிறது.
இதையும் படிக்க: மோகன்லாலின் துடரும் டிரைலர்!
இந்த நிலையில், அண்மையில் வெளியாகி விமர்சகர்களிடம் பாராட்டுகளைப் பெற்ற ‘ஜென்டில்வுமன்’ படத்தின் இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ளதாகவும் படத்தின் அறிவிப்பு இன்னும் சில நாள்களில் வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.