செய்திகள் :

ஜெயிலர் வசூலைக் கூலி முறியடிக்குமா? திருப்பூர் சுப்பிரமணியம் பதில்!

post image

கூலி திரைப்படம் குறித்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் பேசியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் ஆக. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக பெரிய வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

இதுவரை இப்படம் ரூ. 450 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருக்கலாம் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், “நடிகர் ரஜினிகாந்த்தின் கூலி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. விமர்சகர்கள் என்கிற பெயரில் பலரும் வன்மமான கருத்துகளைப் பேசி வருகின்றனர். ஆனால், அவற்றால் படத்தின் வணிகம் பாதிக்கப்படவில்லை. இதுவரை தமிழகத்தில் வெளியான படங்களில் அதிக லாபகரமான படமென்றால் ஜெயிலர்தான். கூலி திரைப்படம் ஜெயிலருக்குக் குறைவில்லாமல் இருக்கும் என நினைக்கிறேன்.

நடிகர் ரஜினிகாந்த் 50 ஆண்டுகளாக சினிமாவில் வசூல் சக்ரவர்த்தியாக இருப்பது பெரிய ஆச்சரியம்தான். கூலி படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைக்காமல் இருந்திருந்தால் இன்னும் வணிகம் அதிகரித்திருக்கும். ஒடிடியில் வெளியானதும் எப்படியும் குழந்தைகள் பார்க்கத்தான் போகிறார்கள். அதனால், ஓடிடி நிறுவனத்துக்குத்தான் லாபம். ” எனப் பேசியுள்ளார்.

இதையும் படிக்க: கார்த்தியுடன் இணைந்து நடிக்கும் ஜீவா?

tamilnadu theater owners association president tirupur subramaniam spokes about coolie buisness

நாய்கள் முக்கியமா? குழந்தைகள் முக்கியமா? ஜி.பி. முத்துவுக்கு நடிகை பதிலடி!

நாய்களை விட குழந்தைகளே முக்கியம் எனக் கூறி விடியோ வெளியிட்ட ஜி.பி. முத்துவுக்கு சின்ன திரை நடிகை ஸ்வேதா பதிலளித்துள்ளார். குழந்தைகள் மீது அக்கறை இருந்தால், அவர்களை நாய் கடிக்கும் அளவுக்கு தெருவில் விட... மேலும் பார்க்க

20 வது பிறந்தநாள் கொண்டாடிய பிக் பாஸ் ஜோவிகா!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற, நடிகையும் திரைப்பட தயாரிப்பாளருமான ஜோவிகா 20 வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். பதின் பருவத்திலிருந்து 20களில் நுழைவது, புதிய வியப்புகளையும் அச்சங்களையும் ஒர... மேலும் பார்க்க

அரசியலில் களமிறங்கும் சூர்யா? நற்பணி இயக்கம் மறுப்பு!

நடிகர் சூர்யா குறித்து பரவும் அவதூறுகளுக்கு அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்தாண்டு தேர்தல் வரவிருக்கும் நிலையில் சூர்யாவும் இந்தப் பிரசாரத்தில் கலந்... மேலும் பார்க்க

22 ஆண்டுகளுக்குப் பிறகு மகனும் தந்தையும்... படப்பிடிப்பு தொடங்கியது!

நடிகர் ஜெயராமும் அவரது மகன் காளிதாஸும் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார்கள். ஆகாஷங்கள் ஆயிரம் எனப் பெயரிடப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக படக்குழு தெரிவித்துள்ளது. மலையாளத்தின் மூத்த ந... மேலும் பார்க்க

ஆண்டின் சிறந்த வீரர் விருது... அதிகமுறை வென்று முகமது சாலா சாதனை!

லிவர்பூல் கால்பந்து வீரர் முகமது சாலா மூன்றாவது முறையாக பிஎஃப்ஏ ஆண்டின் சிறந்த வீரர் விருதை வென்று சாதனை படைத்துள்ளார். எகிப்திய நாட்டைச் சேர்ந்த முகமது சாலா (33) இங்கிலாந்தின் பிரீமியர் லீக்கில் லிவர... மேலும் பார்க்க

அசோக் செல்வன், நிமிஷா நடிப்பில் புதிய படம்!

நடிகர்கள் அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.நடிகர் அசோக் செல்வன் தமிழில் வளர்ந்துவரும் நடிகராக இருக்கிறார். அதேபோல், சித்தா மற்றும் டிஎன்ஏ திரைப்படங்களில் ... மேலும் பார்க்க