``யோகி ஆதித்யநாத்தை பிரதமராக அறிவிக்க இருந்தார்கள்..'' - அகிலேஷ் யாதவ் சொல்வது எ...
ஜெர்மனியில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய இங்கிலாந்து வீரர் ஹாரி கேன்!
ஜெர்மனியில் புகழ்பெற்ற புன்டெஸ்லிகா கால்பந்து தொடரில் ஹாரி கேன் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ஜெர்மனி ஜெயண்ட்ஸ் எனப்படும் பெயர்ன் மியூனிக் அணிக்காக விளையாடும் இங்கிலாந்த்தைச் சேர்ந்த ஹாரி கேன் போட்டியின் 13ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார்.
இந்த கோல் மூலம் 60 போட்டிகளில் 60 கோல்கள் 15 அசிஸ்ட்ஸ் செய்து அசத்தியுள்ளார்.
புன்டெஸ்லிகா கால்பந்து தொடரில் ஒரு வீரர் அதி வேகமாக 60 கோல்களை அடித்தவர்களில் இவர்தான் முதலிடத்தில் இருக்கிறார்.
இதற்கு முன்பாக எர்லீங் ஹாலண்ட் 65 போட்டிகளில் 60 கோல்களை அடித்துள்ளார்.
இந்தப் போட்டியில் பெயர்ன் மியூனிக் 4-0 என அபார வெற்றி பெற்றது.
புள்ளிப் பட்டியலில் 30 போட்டிகளில் 72 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.
மீதமுள்ள 4 போட்டிகளில் சில போட்டிகளில் வென்றாலே போதும் எளிதாக கோப்பையை வென்றுவிடும்.
புன்டெஸ்லிகா கால்பந்து தொடரில் இதுவரை பெயர்ன் மியூனிக் அணி 32 முறை கோப்பையை வென்றுள்ளது. அதிலும் 2013 முதல் 2023 வரை தொடர்ச்சியாக 11 முறை கோப்பையை வென்று ஜெர்மனி ஜெயன்ட்ஸ் என்ற பட்டத்தையும் ரசிகர்களால் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
6️⃣0️⃣ #Bundesliga Goals in 6️⃣0️⃣ #Bundesliga Games!
— FC Bayern (@FCBayernEN) April 19, 2025
Harry Kane #FCBayern#MiaSanMiapic.twitter.com/PJ3fEbRjXN