செய்திகள் :

ஜெ.பி.நட்டாவுடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனை!

post image

புது தில்லி: புது தில்லியில் ஜெ. பி. நட்டாவை இன்று(செப். 22) நயினார் நாகேந்திரன் சந்தித்துப் பேசினார். இதற்காக சென்னையிலிருந்து இன்று(செப். 22) பகல் தில்லிக்கு புறப்பட்டுச் சென்ற தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அங்கு பாஜக தலைவர் ஜெ. பி. நட்டாவுடன் ஆலோசனை நடத்தினார்.

அதன்பின், செய்தியாளர்களுடன் பேசிய அவர், “மதுரையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கவே நட்டாவைச் சந்தித்துப் பேசினேன். அந்தப் பொதுக்கூட்டத்தைத் தொடர்ந்து, நடைப்பயணமும் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் தேர்தல் இன்னும் தொடங்கவில்லை. அதற்கு இன்னும் 6 மாத காலம் உள்ளது” என்றார்.

தில்லியிலுள்ள ஜெ. பி. நட்டாவின் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் உடனிருந்தார்.

BJP Tamil Nadu President Nainar Nagenthran meeting Union Minister and BJP National President JP Nadda

மோடி அரசுக்கு நன்றி: சமூக வலைதளங்களில் படத்தை மாற்றிய பாஜக தலைவர்கள்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு நன்றி எனக் கூறி சமூக வலைதளப் பக்கங்களில் பாஜக தலைவர்கள் புகைப்படங்களை மாற்றியுள்ளனர். ஜிஎஸ்டி சீர்திருத்தத்தில் நடுத்தர மக்கள் பயன்பெறுவதை சுட்டிக்காட்டும் வக... மேலும் பார்க்க

மாணவர்கள் நலனில் அரசியல் வேண்டாம்: அன்பில் மகேஸ்

மாணவர்கள் நலனில் அரசியல் செய்ய வேண்டாம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உடனான ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொ... மேலும் பார்க்க

இரவில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,அடுத்த 3 மணிநேரத்துக... மேலும் பார்க்க

நெய் விலை லிட்டருக்கு ரூ. 40 குறைப்பு: ஆவின் விளக்கம்!

நெய் விலை லிட்டருக்கு ரூ. 40 குறைக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.நாடு முழுவதும் 5%, 18% ஆகிய இரு விகித சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. பதப்... மேலும் பார்க்க

திருச்செந்தூர் கோயிலில் பஞ்சலிங்க தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பஞ்சலிங்க தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் முருகப் பெருமானை தரிசித்துவி... மேலும் பார்க்க

தில்லி புறப்பட்டார் நயினார் நாகேந்திரன்! காரணம் என்ன?

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை விமான நிலையத்தில் இருந்து தில்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.சேலத்தில் நேற்று(செப். 21) பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாட... மேலும் பார்க்க