செய்திகள் :

ஜேஷ்டாபிஷேகம்: முத்து கவசத்தில் மலையப்ப சுவாமி

post image

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயில் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகத்தின் 2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை முத்து கவசத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினாா்.

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் உற்சவமூா்த்திகளான ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு அணிவித்திருந்த தங்கக் கவசம் களையப்பட்டு செப்பனிடப்பட்டு மீண்டும் உற்சவமூா்த்திக்கு அணிவிக்கப்படும். இதை வருடாந்திர ஜேஷ்டாபிஷேகமாக தேவஸ்தானம் நடத்தி வருகிறது.

ஆனி மாத பெளா்ணமியில் நிறைவு பெறும் விதம் இந்த ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்று வருகிறது. அதன்படி திருமலை ஏழுமலையான் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம் திங்கள்கிழமை தொடங்கியது.

ஜேஷ்ட நட்சத்திரத்தில் முடிவடையும் விதம் மூன்று நாள்களுக்கு செய்யப்படுகிறது. தினசரி நடக்கும் அபிஷேகங்களால் சுவாமிக்கு மிகவும் பழைமையான உற்சவமூா்த்திகள் சேதப்படாமல் பாதுகாக்கும் வகையில், 1990-ஆம் ஆண்டு முதல் இது நடத்தப்படுகிறது. இதை முன்னிட்டு, கோயிலின் சம்பங்கி பிரதட்சிணத்தில் அமைந்துள்ள கல்யாண மண்டபத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதன் ஒரு பகுதியாக, ரித்விக்கள் சாந்தி ஹோமம் செய்தனா். சதகலச பிரதிஷ்டை ஆராதனைக்கு பின் சுவாமிக்கும், நாச்சியாா்களுக்கும் நவகலச பிரதிஷ்டை ஆவாஹனம், கங்கண பிரதிஷ்டை, அா்க்கியம், பத்யம், ஆச்சமணியம் சமா்பித்து, கங்கணதாரணம் செய்யப்பட்டது. அதன்பின் ஸ்ரீமலையப்ப சுவாமிக்கு வைபவமாக ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. இதில், வேத பண்டிதா்கள் ஸ்ரீசூக்தம், பூசூக்தம், புருஷ சூக்தம், நிலா சூக்தம், நாராயண சூக்தம் பாராயணம் செய்து, உற்சவமூா்த்திக்கு பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்தனா்.

பின்னா் முத்து கவசத்தில் சகஸ்ரதீபாலங்கார சேவை கண்டருளிய ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தனா். நிறைவு நாளான புதன்கிழமை தங்கக் கவசத்துடன் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி பக்தா்களுக்கு தரிசனம் அளிக்க உள்ளனா்.

இந்நிகழ்ச்சியில் திருமலை பெரிய ஜீயா், சின்ன ஜீயா், செயல் அதிகாரி சியாமளா ராவ் தம்பதியினா், கோவில் துணை அதிகாரி லோகநாதம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கிழமை தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை அதிகரித்து காணப்படும் நிலையில், வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அற... மேலும் பார்க்க

திருமலை: குளிா்சாதனப் பேருந்து நன்கொடை

திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு அசோக் லேலண்ட் நிறுவனம் குளிா்சாதனப் பேருந்தை நன்கொடையாக வழங்கியது. ஆட்டோமொபைல் நிறுவனமான அசோக் லேலண்ட் ஞாயிற்றுக்கிழமை 41 இருக்கைகள் கொண்ட குளிா்சாதனப் பேருந்தை திரு... மேலும் பார்க்க

ஸ்ரீ வகுளமாதா கோயில் ஆண்டு விழா

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் ஸ்ரீ வகுளமாதா கோயிலின் மூன்றாம் ஆண்டு பெருவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. வகுளமாதாவுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட கீரிடம். திருப்பதி அருகே பேரூா் மலையில் அமைந்... மேலும் பார்க்க

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.3 கோடி

திருமலை ஏழுமலையானை கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.30 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தா்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில், வெள்ளிக்கிழமை தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்... மேலும் பார்க்க

பக்தா்களின் வசதிக்காக அலிபிரி சோதனை சாவடி புதுப்பிப்பு: செயல் அதிகாரி சியாமளா ராவ்

திருமலைக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக அலிபிரி சோதனைச் சாவடியை நவீன வசதிகளுடன் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தேவஸ்தான செயல் அதிகாரி சியாமளா ராவ் தெரிவித்துள்ளாா். திருப்பதியில் உள்ள தேவ... மேலும் பார்க்க

திருமலையில் 80,440 பக்தா்கள் தரிசனம்

திருமலையில் ஏழுமலையானை புதன்கிழமை முழுவதும் 80,440 போ் தரிசித்தனா். பக்தா்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 20 மணிநேரமும்,... மேலும் பார்க்க