செய்திகள் :

ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் உற்பத்தி 14% அதிகரிப்பு!

post image

புதுதில்லி: ஜூன் மாத முடிய காலாண்டில் நிறுவனத்தின் ஸ்டீல் உற்பத்தி 14 சதவிகிதம் அதிகரித்து 7.26 மில்லியன் டன்னாக உள்ளதாக ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் தெரிவித்துள்ளது. இதுவே கடந்த வருடம் இதே காலகட்டத்தில் அதன் உற்பத்தி 6.35 மில்லியன் டன்னாக இருந்தது.

இருப்பினும், காலாண்டுக்கு காலாண்டு அடிப்படையில், ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டில் 7.63 மில்லியன் டன்னாக இருந்த உற்பத்தியுடன் ஒப்பிடும் போது இது 5 சதவிகிதம் குறைவு.

திட்டமிடப்பட்ட பராமரிப்பு நிறுத்தங்களும் பிறகு, உலைகள் மீண்டும் தொடங்கி, உகந்த திறனுடன் இயங்கி வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் செயல்பாடு திறன் முதல் காலாண்டில் 87% உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவில், ஜே.எஸ்.டபிள்யூ ஏப்ரல் முதல் ஜூன் வரையான நிதியாண்டு 2026ல் 7.02 மில்லியன் டன் எஃகு உற்பத்தி செய்தது. இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலாண்டில் அது 6.12 மில்லியன் டன்களை விட 15 சதவிகிதம் அதிகமாகும்.

மார்ச் 31, 2025 உடன் முடிவடைந்த காலாண்டில் 7.40 மில்லியன் டன்களாக இருந்த உற்பத்தியை விட இது 5 சதவிகிதம் குறைவாகும்.

இதையும் படிக்க: பிரதமர் மோடிக்கு நமீபியாவின் உயரிய விருது - புகைப்படங்கள்

சரிவுடன் வர்த்தகமாகும் பங்குச்சந்தை! ஐடி பங்குகள் வீழ்ச்சி!

பங்குச்சந்தைகள் இன்று(வியாழக்கிழமை) சற்றே ஏற்றத்துடன் தொடங்கிய நிலையில் தற்போது சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 83,658.20 என்ற புள்ளிகளில் தொடங்... மேலும் பார்க்க

தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 160 அதிகரித்துள்ளது.சென்னையில் தங்கம் விலை வாரத் தொடக்க நாளான திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.72,080-க்கு விற்பனையான... மேலும் பார்க்க

எல்ஐசி-யின் புதிய காப்பீட்டு திட்டங்கள்

நவ் ஜீவன் ஸ்ரீ (திட்டம் 912), எல்ஐசியின் நவ் ஜீவன் ஸ்ரீ ஒற்றை பிரீமியம் (திட்டம் 911) ஆகிய இது காப்பீட்டு திட்டங்களை இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி) அறிமுகப்படுத்தியுள்ளது.இது குறித்து நிறு... மேலும் பார்க்க

நம்ம முடியாத விலையில் ஒன்பிளஸ் பேட் லைட்! இந்தியாவில் அறிமுகம்

ஒன்பிளஸ் பேட் லைட் என்ற புதிய கையடக்கக் கணினியை இந்திய சந்தைக்கு ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இங்கிலந்து, ஐரோப்பா நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவில் ஒன்பிளஸ் பேட் லைட் அறிமுகமாகியுள்ளது. ஒன்பி... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் உயர்ந்து ரூ.85.67 ஆக முடிவு!

மும்பை: அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்த நம்பிக்கை மற்றும் பரஸ்பர வரிகள் விதிப்பதில் தாமதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்று (புதன்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 6 காசுகள் ... மேலும் பார்க்க

25,500 புள்ளிகளுக்குக் கீழே சென்ற நிஃப்டி; சென்செக்ஸ் 83,536 புள்ளிகளுடன் நிறைவு!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் முடிவடைந்தன. அமெரிக்க அதிபர் டிரம்ப் மேலும் ஏழு நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை அறிவிப்பதை முன்னிட்டு முதலீட்... மேலும் பார்க்க