'குடும்பத்தினர் அதானியை சந்திக்கவில்லை என முதல்வர் சொல்வாரா?' - ஆதாரம் இருக்கு எ...
டாக்டர் மன்மோகன் சிங் மறைவு: 7 நாள்கள் அரசு துக்கம் அனுசரிப்பு!
புது தில்லி: முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் வியாழக்கிழமை(டிச. 26) இரவு 10 மணியளவில் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் காலமானார்.
டாக்டர் மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்னாரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: டாக்டர் மன்மோகன் சிங் மறைவு: தலைவர்கள் இரங்கல்!
இந்த நிலையில், மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக 7 நாள்கள் அரசு தரப்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை(டிச. 27) திட்டமிடப்பட்டிருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகின்றன.
மேலும், காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூடி இரங்கல் கூட்டமும் நடைபெறும். அன்னாரது இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:மன்மோகன் சிங்கின் காணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்!