செய்திகள் :

டாம் லாதம் விலகல்; டெஸ்ட் அணியின் கேப்டனாக மிட்செல் சாண்ட்னர் நியமனம்!

post image

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான கேப்டனாக மிட்செல் சாண்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் நாளை (ஜூலை 30) முதல் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் நாளை தொடங்குகிறது.

டாம் லாதம் விலகல்; மிட்செல் சாண்ட்னர் கேப்டன்

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், நியூசிலாந்து அணியின் கேப்டனாக மிட்செல் சாண்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த டாம் லாதமுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால், அவர் முதல் டெஸ்ட்டிலிருந்து விலகியுள்ளார். இதனையடுத்து, டெஸ்ட் போட்டிகளுக்கான 32-வது கேப்டனை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் டி20 போட்டியில் விளையாடியபோது, டாம் லாதமுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. காயத்திலிருந்து குணமடைந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெஸ்ட் போட்டிகளுக்கான நியூசிலாந்து அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள மிட்செல் சாண்ட்னர், இதுவரை நியூசிலாந்து அணிக்காக 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,066 ரன்கள் மற்றும் 74 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான நியூசிலாந்து அணி விவரம்

மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), டாம் பிளண்டல், டெவான் கான்வே, ஜேக்கோப் டஃபி, மாட் ஃபிஷர், மாட் ஹென்றி, டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், வில்லியம் ஓ’ரூர்க், அஜாஸ் படேல், மைக்கேல் பிரேஸ்வெல், ரச்சின் ரவீந்திரா, நாதன் ஸ்மித், வில் யங்.

இதையும் படிக்க: கடைசி டெஸ்ட்டில் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு ஓய்வளிக்க வேண்டும்: ஸ்டுவர்ட் பிராட்

Mitchell Santner has been named captain for the Test series against Zimbabwe.

ஓவல் டெஸ்ட்: பிளேயிங் லெவனில் ஜெகதீசனுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் தமிழக வீரர் ஜெகதீசனுக்கு வாய்ப்பு கிடைக்குமா என தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் கோயம்புத்தூரைச் சேர்ந்த என். ஜெகதீசன் (29 ... மேலும் பார்க்க

ஓவல் டெஸ்ட்டில் ஸ்டோக்ஸ் விலகல்..! இங்கிலாந்து அணியில் 4 மாற்றங்கள்!

இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக ஓவல் டெஸ்ட்டிலிருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது.மான்செஸ்டர் டெஸ்ட்டி... மேலும் பார்க்க

காலனித்துவ காலத்தில் இருக்கிறோமா? ஓவல் பிட்ச் மோதல் பற்றி முன்னாள் வீரர்!

ஓவல் பிட்ச் மேற்பார்வையாளுடன் நடந்த மோதல் குறித்து முன்னாள் இந்திய வீரர் காலனித்துவ காலத்திலா இருக்கிறோம் எனக் கூறியுள்ளது கவனம் ஈர்த்துள்ளது. ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் இங்கிலாந்து அணி 2-1 என... மேலும் பார்க்க

டி20யில் முதலிடம் பிடித்த அபிஷேக் சர்மா..! 4-ஆவது இந்தியராக சாதனை!

ஐசிசி டி20 தரவரிசையில் அபிஷேக் சர்மா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். டி20 தரவரிசையில் நான்காவது இந்தியராக இந்த மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளார். பஞ்சாபில் அமிர்தசரஸைச் சேர்ந்த அபிஷேக் சர்மா (24 வ... மேலும் பார்க்க

9 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடர்: ஜிம்பாப்வே 4 விக்கெட்டுகளுக்கு தடுமாற்றம்!

நியூசிலாந்துக்கு எதிரான ஜிம்பாப்வேயின் முதல் டெஸ்ட்டில் மதிய உணவு இடைவேளை வரை 4 விக்கெட்டுகள் இழந்துள்ளது. ஜிம்பாப்வே-க்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நியூசிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விள... மேலும் பார்க்க

ஓவல் டெஸ்ட்: பும்ராவுக்குப் பதிலாக ஆகாஷ் தீப்!

இந்தியாவின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா ஓவல் டெஸ்ட்டில் விளையாடமாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. மா... மேலும் பார்க்க