கோவாவில் கோயில் திருவிழாவில் 6 பேர் பலி: 50,000-க்கும் மேற்பட்டோர் ஒரேநேரத்தில் ...
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 1 காசு உயர்ந்து ரூ.84.53 ஆக முடிவு!
மும்பை: தொடர்ச்சியாக அந்நிய நிதி வரத்து மற்றும் வலுவான உள்நாட்டு தரவுகளால் அந்நிய செலாவணி வர்த்தகத்தில் இன்று இந்திய ரூபாய் 1 காசு உயர்ந்து ரூ.84.53 ஆக முடிந்தது.
ஏப்ரல் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ரூ.2.37 லட்சம் கோடி உயர்ந்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து உற்பத்தித் துறை வளர்ச்சியானது 10 மாத உயர்வை எட்டியதையடுத்து முதலீட்டாளர்களை இது வெகுவாக உற்சாகப்படுத்தியது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 83.98 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு அதிகபட்சமாக ரூ.83.76 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.84.55 ஐ தொட்ட நிலையில், முடிவில் 1 காசு உயர்ந்து ரூ.84.53-ஆக முடிந்தது.
நேற்று முன்தினம் (புதன்கிழமை) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 42 காசுகள் உயர்ந்து ரூ.84.54-ஆக இருந்தது.
இதையும் படிக்க: சென்செக்ஸ், நிஃப்டி உயர்ந்து முடிவு!