டாலருக்கு நிகரான ரூபாய் 1 காசு உயர்ந்து ரூ.85.53 ஆக முடிவு!
மும்பை: வலுவான அந்நிய வரவுகள் மற்றும் டாலர் குறியீட்டில் ஏற்பட்ட ஓரளவு சரிவு ஆகியவற்றின் பின்னணியில் இன்றைய வர்த்தகத்தில் இந்திய ரூபாய் 1 காசு உயர்ந்து 85.53 ஆக நிறைவடைந்தது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு, உள்நாட்டில் பங்குச் சந்தைகள் சரிவு மற்றும் ஏப்ரல் மாதத்தில் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை விரிவடைவதைக் காட்டும் தரவுகளால் இந்திய ரூபாய் சரிவு ஏற்பட்டதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.28 ஆக தொடங்கி ரூ.85.28 முதல் ரூ.85.70 வரை வர்த்தகமானது. இறுதியில் அது முந்தைய முடிவை விட 1 காசு உயர்ந்து ரூ.85.53 ஆக நிலைபெற்றது.
நேற்றைய வர்த்தகத்தில், இந்திய ரூபாய் 22 காசுகள் குறைந்து ரூ.85.54ஆக நிறைவடைந்தது.
இதையும் படிக்க: சரிவுடன் நிறைவடைந்த பங்குச் சந்தை: சென்செக்ஸ் 200.15 புள்ளிகள் இழப்பு!