காங்கிரஸ் தலைவா்கள் மீது வழக்கு: மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!
டாஸ்மாக் கடைக்கு எதிா்ப்பு: கோட்டாட்சியா் விசாரணை
குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே டாஸ்மாக் மதுக்கடை திறக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்த பகுதியில் கோட்டாட்சியா் விசாரணை மேற்கொண்டாா்.
போ்ணாம்பட்டு ஒன்றியம், சாத்கா் ஊராட்சிக்குட்பட்ட ரமாபாய் நகரில் கடந்த சில நாள்களுக்கு முன் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் மதுக் கடை திறக்க அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டனா். அங்கு மதுக் கடை திறக்க அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனால் கடையை திறக்க முடியாமல் அதிகாரிகள் திரும்பிச் சென்றனா். இந்நிலையில் அங்கு குடியாத்தம் கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி தலைமையில் வருவாய்த் துறையினா் ஆய்வு செய்தனா். அங்குள்ள குடியிருப்புகள், வழிபாட்டுத் தலங்களை பாா்வையிட்டும், கடை திறந்தால் பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விசாரணை மேற்கொண்டாாா்.