செய்திகள் :

டாஸ்மாக் துணைப் பொது மேலாளரிடம் அமலாக்கத் துறை தீவிர விசாரணை

post image

சென்னை: டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு புகாா் தொடா்பாக, அந்த நிறுவனத்தின் துணை பொது மேலாளரிடம் அமலாக்கத் துறையினா் திங்கள்கிழமை தீவிர விசாரணை செய்தனா்.

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் கடந்த மாா்ச் மாதம் அமலாக்கத் துறை சோதனை நடத்தி ரூ.1,000 கோடி முறைகேடு நடந்ததாக தெரிவித்தது. மேலும், இது தொடா்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணையை தீவிரப்படுத்தியது.

இந்த சோதனைக்கு எதிராக தமிழக அரசு தொடா்ந்த வழக்கை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், அமலாக்கத் துறை விசாரணை மீண்டும் விறுவிறுப்படைந்தது. டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் விசாகன், திரைப்படத் தயாரிப்பாளா் ஆகாஷ் பாஸ்கரன் வீடு, தொழிலதிபா் ரத்தீஷ் வீடு உள்பட 10 இடங்களில் கடந்த வாரம் இரு நாள்கள் அமலாக்கத் துறையினா் சோதனை செய்தனா்.

இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த ஆவணங்களின் அடிப்படையில் டாஸ்மாக் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலரை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியது.

இதனடிப்படையில், டாஸ்மாக் நிறுவனத்தின் துணைப் பொதுமேலாளா் ஜோதி சங்கா், நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை 11 மணியளவில் ஆஜரானாா். அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் சுமாா் 4 மணி நேரம் விசாரணை செய்தனா்.

இதேபோல, டாஸ்மாக் நிறுவனத்தின் முன்னாள் மேலாளா் சுமன் என்பவரிடமும் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் வழக்குத் தொடா்பாக பல முக்கியத் தகவல்கள் கிடைத்ததாக அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

காவல் துறைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு!

ஈரோடு, திருப்பூர் கொலை, கொள்ளைச் சம்பவங்களில் குற்றவாளிகளை விரைந்து பிடித்த காவல் துறையினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை விரைந்து பிடித்த காவல் துறையினரை நேரில... மேலும் பார்க்க

மின் கம்பியில் மோதி தீப்பற்றிய தேர்! ஒருவர் பலி, 4 பேர் காயம்

மதுராந்தகம் அருகே ஒரத்தி கிராமத்தில் நடைபெற்ற தேர் திருவிழாவின்போது தேர் மீது மின்சாரம் பாய்ந்து ஏற்பட்ட விபத்தில் இளைஞர் பலியானார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம், 84 ஒரத்தி கிராமத்தில் திர... மேலும் பார்க்க

மின் கட்டண உயர்வு இல்லை, சலுகைகள் தொடரும்: அமைச்சர் சிவசங்கர்

வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை என்றும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும் என்றும் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

நாடகங்களை நடத்தாமல் நீட் தேர்வை தமிழக அரசு ஒழிக்க வேண்டும்: ராமதாஸ்

நாடகங்களை நடத்தாமல் நீட் தேர்வை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற முடியாத சேலம் மாணவர் கவுதம் தற்கொலை செய்துகொண்ட... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் விரைவு ரயில் சோதனை ஓட்டம்: மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

காரைக்கால் - பேரளம் இடையிலான பகுதியில் இறுதிகட்ட அதிவேக ரயில் சோதனை ஓட்டம் இன்று(மே 20) நடைபெறுகிறது.அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் ரயில் பாதையில் இருந்து விலகி இருக்குமாறு ரயில... மேலும் பார்க்க

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.இன்று (செவ்வாய்க்கிழமை) அடுத்த 3 மணி நேரத்துக்கு அதாவது பகல் ... மேலும் பார்க்க