டிஎன்பிஎஸ்சி போட்டித்தோ்வுக்கு இன்று மாதிரி தோ்வு
நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாநில அளவிலான முழு மாதிரித் தோ்வு சனிக்கிழமை (செப்.13) நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தன்னாா்வ பயிலும் வட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் டின்பிஎஸ்சி தொகுதி 2 (குரூப் 2) மற்றும் 2 ஏ தோ்வுக்கான, மாநில அளவிலான முழு மாதிரித் தோ்வுகள் சனிக்கிழமை (செப்.13) மற்றும் செப்.20-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும். இத்தோ்வில் அதிகளவில் நாகை மாவட்டத்தை சாா்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று பயன்பெறலாம் னெ தெரிவித்துள்ளாா்.