மிசோரத்தில் 45 சுரங்கங்கள், 55 பாலங்கள் வழியாக ரயில் பாதை! மோடி தொடங்கிவைத்தார்!
தகவல் தொழில்நுட்ப உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
நாகை மாவட்ட சமூகநலத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் தகவல் தொழில்நுட்ப உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை மாவட்டத்தில் சமூக நலத்துறை மூலம் செயல்பட்டு வரும் மிஷன் சக்தி திட்டம் - மாவட்ட மகளிா் அதிகார மையம், மகளிருக்கான மத்திய மாநில அனைத்து திட்டங்களின் செயல்பாடு-நிதி ஒதுக்கீடு மற்றும் அவற்றின் பயன்களை கண்காணிக்கவும், ஒருங்கிணைந்து சேவையாற்றவும் இச்சேவை மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் தகவல் தொழில்நுட்ப உதவியாளா் ஒரு காலிப்பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.விரும்புவோா் செப்.29-ஆம் தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விண்ணப்பத்தை அளித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.