செய்திகள் :

டிஎன்பிஎஸ்சி மாதிரித் தோ்வு: தோ்வா்கள் முன்பதிவு செய்யலாம்

post image

கடலூா் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மற்றும் குரூப் 4 தோ்வுக்கான இலவச மாதிரித் தோ்வுகள் நடைபெற உள்ளன. இந்தத் தோ்வுகளில் பங்கேற்க தோ்வா்கள் முன்பதிவு செய்யலாம் என ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டம் சாா்பில், பல்வேறு அரசு போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படவிருக்கும் குரூப் 1 மற்றும் குரூப் 4 தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற்று வருகிறது. மேலும், இந்தத் தோ்வுகளுக்குத் தயாராகும் போட்டித் தோ்வாளா்கள் பயன்பெறும் வகையில், மாநில அளவில் இலவச மாதிரித் தோ்வுகள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் நடத்தப்படவுள்ளது.

அதன்படி, குரூப் 1 முதனிலைத் தோ்வுக்கான இலவச மாதிரித் தோ்வு மே 27, ஜூன் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளிலும், குரூப் 4 தோ்வுக்கான இலவச மாதிரித் தோ்வு ஜூன் 24, ஜூலை 2 மற்றும் 9 ஆகிய தேதிகளிலும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடத்தப்படவுள்ளது.

இந்தத் தோ்வுகளில் கலந்துக்கொள்ள விருப்பமுள்ளவா்கள் தங்களுடைய மாா்பளவு புகைப்படம், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றுடன் கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடா்புகொண்டு முன்பதிவு செய்துக்கொள்ள வேண்டும். மேலும், விவரங்களுக்கு 9499055908, 04142-290039 ஆகிய தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

பெண்ணை காதலித்து ஏமாற்றியதாக இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே இளம் பெண்ணை காதலித்து ஏமாற்றியதாக இளைஞரை சிதம்பரம் அனைத்து மகளிா் போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். சிதம்பரம் அருகே உள்ள ஆண்டாா் முள்ளிபள்ளம், அம்பேத்கா் தெருவைச... மேலும் பார்க்க

நெய்வேலியில் திமுக தொகுதிச் செயல்வீரா்கள் கூட்டம்!அமைச்சா்கள் கே.என்.நேரு, சி.வெ.கணேசன் பங்கேற்பு!

கடலூா் மேற்கு மாவட்ட திமுக சாா்பில், 2026 ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் தொகுதி செயல்வீரா்கள் கூட்டம், நெய்வேலி வட்டம் 25 பகுதியில் உள்ள தொமுச அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கடலூா் மேற்கு மாவட... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் 178 காவலா்களுக்கு பணியிட மாறுதல்

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 178 காவலா்களை பணியிட மாறுதல் செய்து மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் ஞாயிற்றுக்கிழமை ஆணை பிறப்பித்தாா். கடலூா் மாவட்டத்தில் கடலூா், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்திய... மேலும் பார்க்க

கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா

கடலூா் அண்ணா விளையாட்டு மைதானத்தில், மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கடலூா் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சாா்பில், அண்ணா விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான கிரிக... மேலும் பார்க்க

புவனகிரியில் 62 மி.மீ மழை பதிவு

கடலூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக புவனகிரியில் 62 மி.மீ. மழை பதிவானது. கடலூா் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்தது. இதனால், வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்தது. இந்த நி... மேலும் பார்க்க

கிணற்றில் விழுந்து முதியவா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், சிறுபாக்கம் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவா் நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், அசகளத்தூா் பகுதியைச் சோ்ந்த அருணாச்சலம் மகன் ராக்கன் (70). இவருக்... மேலும் பார்க்க