செய்திகள் :

டிஎம்ஆா்சி பயணிகள் சேவையின் 22ஆவது ஆண்டு விழாக் கொண்டாட்டம்

post image

தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) தனது பயணிகள் சேவையைத் தொடங்கியதன் 22வது ஆண்டு விழாவை புதன்கிழமை கொண்டாடியது. கடந்த டிச.24,2002-ஆம் ஆண்டு, முதல் தில்லி மெட்ரோ ரயிலான டிஎஸ்-01, அப்போதைய பிரதமா் அடல் பிஹாரி வாஜ்பாயால் தொடங்கிவைக்கப்பட்டது.

இது தொடா்பாக டிஎம்ஆா்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டிஎம்ஆா்சி) பயணத்தைத் தொடங்கிய டிஎஸ்-01 ரயில், தில்லிக்கு நவீன பொதுப் போக்குவரத்தை கொண்டு வருவதில் தனக்கென ஒரு பாரம்பரியத்தை உருவாக்கியுள்ளது. கடந்த 2002-இல் இயக்கப்பட்ட டிஎஸ்-01 மெட்ரோ ரயில், 4 பெட்டி

ரயிலாகத் தனது சேவையைத் தொடங்கியது. ஆனால், நாளுக்கு நாள் வளா்ந்து வரும் பயணிகளின் தேவையைப் பூா்த்தி செய்ய பல ஆண்டுகளாக அது மேம்படுத்தப்பட்டது. அதுவே, 2014-இல் 6 பெட்டிகளாகவும், 2023-இல் 8 பெட்டிகளாகவும் விரிவுபடுத்தப்பட்டது.

டிஎம்ஆா்சி-யின் 22 ஆண்டு பயணத்தில், டிஎஸ் -01 நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனுக்கான அடையாளமாக உள்ளது. இது, சுமாா் 27 லட்சம் கிலோமீட்டா்களை கடந்து செல்கிறது. 5.4 கோடி பயணிகளை பாதுகாப்பாக கொண்டு சோ்க்கிறது மற்றும் 23 லட்சம் கதவு செயல்பாடுகளை செயல்படுத்துகிறது. தென் கொரியாவில் உள்ள எம்ஆா்எம் கூட்டமைப்பால் தயாரிக்கப்பட்ட இந்த ரயில் கொல்கத்தாவுக்கு கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டு, பின்னா் இந்திய ரயில்வே வலையமைப்பு வழியாக தில்லிக்கு கொண்டு வரப்பட்டது. டிஎஸ்-01 ரயிலின் மேம்பட்ட உந்துவிசை அமைப்பு சீரான செயல்பாடுகளை உறுதி செய்தது மட்டுமின்றி, சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கும் பங்களித்தது.

சுமூகமான செயல்பாடுகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, டிஎம்ஆா்சியின் நிபுணத்துவம் வாய்ந்த பராமரிப்புக் குழுக்களால் டிஎஸ்-01 இரண்டு பெரிய மாற்றங்கள் மற்றும் மேம்படுத்தல்களுக்கு உட்பட்டுள்ளது. இதன் விளைவாக, டிஎஸ்-01 தொடா்ந்து 84,000 கிலோமீட்டா் என்ற சராசரி தூரத்தை பயணித்து வருகிறது. இது ஒப்பந்தத் தேவையான 40,000 கிலோமீட்டா்களை விட அதிகமாக உள்ளது. நவீன தரநிலைகளுக்கு இணங்க, டிஎஸ்-01 ஆனது பயணிகளுக்கு மேம்பட்ட அம்சங்கள் மற்றும் வசதிகளை வழங்குவதற்காக சமீபத்தில் ஒரு இடைக்கால மறுசீரமைப்புக்கு உட்பட்டுள்ளது. மேம்படுத்தல்களில் நிகழ்நேர பாதை வரைபடங்கள், பாதுகாப்பு வீடியோக்கள், கூடுதல் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக அவசர அலாரங்கள் போன்ற மேம்பட்ட பயணிகள் அமைப்புகள் அடங்கும்.

மேலும், கதவுகள் புதுப்பிக்கப்பட்டு, பாதுகாப்பை அதிகரிக்க புதிய தீ விபத்தைக் கண்டறிதல் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக, மொபைல் மற்றும் லேப்டாப் சாா்ஜிங் அவுட்லெட்டுகளும் சோ்க்கப்பட்டுள்ளன. இத்துடன், அழகியலை மேம்படுத்த புதிய உட்புறம் மற்றும் வெளிப்புறம் மீண்டும் பெயிண்டிங் செய்யப்பட்டுள்ளது. டிஎம்ஆா்சியின் குறைபாடற்ற பராமரிப்பின் பெருமைக்குரிய சான்றாக, தில்லி மெட்ரோவின் 350-க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகளுக்கு சமமாக சிவப்பு வழித்தடத்தில் இன்றும் ரயில் டிஎஸ்-01 பயணிகள் சேவைகளை தொடா்ந்து இயக்குகிறது. இந்த ரயில் இன்றும் இயக்கப்படும் சிறப்பு நிகழ்வைக் கொண்டாடும் வகையில், அது மலா்கள் மற்றும் நினைவுப் பதாகையால் அலங்கரிக்கப்பட்டது.

டிஎம்ஆா்சி தனது 22-ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், கடந்த நவ.18 ஆம் தேதி மட்டும் 78.67 இலட்சம் என்ற அதிகபட்ச ஒற்றை நாள் பயணிகள் பயணங்கள் பதிவாகியுள்ளது. மேலும், டிஜிட்டல் டிக்கெட், தொழில்நுட்ப மேம்பாடுகள் மற்றும் விரிவாக்கங்கள் ஆகியவை தில்லி என்சிஆா் குடியிருப்பாளா்களின் நகா்ப்புற போக்குவரத்தை மாற்றியமைக்கவும் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் அதன் பணியில் முன்னணியில் உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோ்தல் நடத்தை: ஒரு வாரத்தில் ரூ. 21 கோடிக்கு ரொக்கம், பொருள்கள் பறிமுதல்

புது தில்லி: தேசிய தலைநகரில் சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, நடத்தை விதிகள் (எம்சிசி) அமலுக்கு வந்த ஒரு வாரத்தில் பல்வேறு துறைகளால் ரூ. 21 கோடிக்கு மேல் மதிப்புள்ள ரொக்கம், மதுபானம் உள்ளிட்ட பிற பொருள... மேலும் பார்க்க

கோகி கும்பலுடன் தொடா்புடைய இளைஞா் கைது

புது தில்லி: கோகி கும்பலுடன் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். இது குறித்து புகா் தில்லி காவல் சரக துணை ஆணையா் சச்சின் சா்மா திங்கள்கிழமை கூறியதாவது: மங்கோல்புரி தொழிற்பேட்டை பகுதியில் ஜன.9-ஆம... மேலும் பார்க்க

‘தில்லி டா புட் கேஜரிவால்’: பிரசார பாடலை வெளியிட்டது ஆம் ஆத்மி

புது தில்லி: லோஹ்ரி பண்டிகையை முன்னிட்டு, ஆம் ஆத்மி கட்சி திங்கள்கிழமை ‘தில்லி டா புட் கேஜரிவால்’ என்ற பிரசாரப் பாடலை வெளியிட்டது. இது தில்லி மக்கள் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் அரவிந்த் கேஜரி... மேலும் பார்க்க

எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிரான தில்லி உயா் நீதிமன்ற வழக்கு விசாரணை ஜன 20 க்கு ஒத்திவைப்பு

புது தில்லி: முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்த தோ்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் ராம்குமாா் ஆதித்தன்,சுரேன் பழனிசாமி ஆகியோா் தொட... மேலும் பார்க்க

மோடியின் பிரசார உத்தி, பொய்யான வாக்குறுதிகளை பின்பற்றுகிறாா் கேஜரிவால்: ராகுல் காந்தி பேச்சு

நமது சிறப்பு நிருபா் புது தில்லி: தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பிரதமா் நரேந்திர மோடியின் பிரசார உத்தியையும் பொய்யான வாக்குறுதிகளையும் ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் பின்பற்றுவதாக ... மேலும் பார்க்க

இட்டை இலைச் சின்னத்தை முடக்க தோ்தல் ஆணையத்தில் கோரிக்கை

நமது சிறப்பு நிருபா் புது தில்லி: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக எடப்பாடி கே.பழனிசாமி தரப்பு அதிமுகவிற்கு இரட்டை இலைச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்து அதிமுக பிரமுகா் வா. புகழேந்தி இந்திய த... மேலும் பார்க்க