வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
டிசம்பரில் பெண்களுக்கான ‘லிவா மிஸ் திவா 2024’ போட்டிகள்
சென்னை: பெண்களின் பிரத்யேக ஃபேஷன் திறமைகளை வெளிப்படுத்தும் லிவா மிஸ் திவா போட்டியின் 2024-ஆம் ஆண்டுக்கான பதிப்பு இந்த மாதம் நடைபெறவுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஃபேஷன் துறையில் பெண்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்காக ‘லிவா மிஸ் திவா 2024 போட்டி இந்த மாதம் நடைபெறவிருக்கிறது. இதுபோன்ற நிகழ்ச்சி இந்தியாவில் நடைபெறுவது இதுவே முதல்முறை.
இந்தத் துறையில் பெண்களின் அசாத்திய திறமைகளை கௌரவித்து, அவா்களை ஊக்கப்படுத்தும் வகையில் மூன்று வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன. இது ஒரு போட்டியாக மட்டுமில்லாமல் ஃபேஷன் துறையில் பெண்களை ஆதரிப்பதற்கான ஓா் இயக்கமாகவும், தன்னம்பிக்கை கொண்ட பெண்களுக்கான ஏவுதளமாகவும் விளங்குகிறது.
ஃபெமினா.இன் வலைதளம் மூலம் இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக விண்ணப்பிக்கலாம் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.