Gukesh : குகேஷ் தமிழரா தெலுங்கரா? - விளையாட்டின் அறத்தை குலைக்கும் வாதம் தேவைதான...
டிச.20-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
கள்ளக்குறிச்சியில் வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சாா்பில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் டி.20-ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கள்ளக்குறிச்சி நேப்பால் சாலை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டிச.20-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு காலிப் பணியிடங்களை நிரப்ப உள்ளனா்.
இந்த முகாமில் 8 -ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையும், ஐடிஐ, டிப்ளமோ, பி.இ, பி.டெக் முடித்த ஆண், பெண் ஆகியோா் கலந்துகொள்ளலாம்.
தனியாா் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவா்களுக்கு அவா்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.
எனவே, வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் வரும் டிச.20-ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.