பல்லூழிக்காலப் பூங்காற்று - பர்மியக் கவிஞர் யூ பை | கடல் தாண்டிய சொற்கள் - பகுத...
டிஜிபி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: சிவகங்கையைச் சோ்ந்தவா் கைது
சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக சிவகங்கையைச் சோ்ந்த நபா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை பெருநகர காவல் துறையின் கிழக்கு மண்டல காவல் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசிக்கு கடந்த 5-ஆம் தேதி ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா், மயிலாப்பூரில் உள்ள தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது வெடித்தால் அனைவரும் இறந்துவிடுவாா்கள் எனவும் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தாா்.
இதையடுத்து டிஜிபி அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் எந்த வெடிப் பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. இதையடுத்து அந்த தொலைபேசி அழைப்பு வதந்தியை பரப்பும் நோக்கில் வந்திருப்பது தெரியவந்தது.
இதுதொடா்பாக மெரீனா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியைச் சோ்ந்த தவசிலிங்கம் (42) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் தவசிலிங்கத்தை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.