யுனைடெட் அணிக்கு வீழ்ச்சியா? ரூ. 470 கோடிக்கு செல்ஸி அணியில் இணைந்த கர்னாச்சோ!
டிபிஎல்: திக்வேஷ் ரதி, நிதீஷ் ராணா உள்பட 5 வீரர்களுக்கு அபராதம்!
தில்லி பிரீமியர் லீக்கில் திக்வேஷ் ரதி, நிதீஷ் ராணா உள்பட 5 வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் போட்டியின் போது வீரர்கள் மோதலில் ஈடுபடுவதைக் குறைக்க இந்த அபராதம் விதிக்கப்படுகிறது.
அடங்காத திக்வேஷ் ரதிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த நிதீஷ் ராணா
திக்வேஷ் ரதி ஐபிஎல் கிரிக்கெட்டின்போது தனது பந்து வீச்சினாலும் நோட்புக் செலிபிரேஷன் மூலமும் பிரபலமானார்.
அதுமட்டுமின்றி அவர் விளையாடிய போட்டிகளில் எல்லாமே அபராதம் வாங்கியும் கவனம் ஈர்த்தார்.
இந்நிலையில், தில்லி பிரீமியர் லீக்கிலும் அவர் இதேமாதிரி வீரர்களுடன் மோதலில் ஈடுபட நினைத்தார். நிதீஷ் ராணாவுடன் அவர் செய்த வம்பிழுக்கும் செயலால் அவரது ஓவரை அடித்துத் துவைக்கப்பட்டது.
திக்வேஷ் ரதியின் நோட்புக் செலிபிரேஷனை அவருக்கு எதிராகவே நிதீஷ் ராணா செய்து அசத்தினார்.
இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத திக்வேஷ் ரதி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், அவர்கள் இருவருக்குமே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
5 வீரர்களுக்கான அபராதம்
கிரீஷ் யாதவ் - 100 சதவிகித அபராதம். (2.3 விதி மீறல், லெவல் 2)
திக்வேஷ் ரதி - 80 சதவிகித அபராதம். (2.2 விதி மீறல்)
நிதீஷ் ராணா - 50 சதவிகித அபராதம். (2.6 விதி மீறல், லெவல் 1)
அமன் பாரதி - 30 சதவிகித அபராதம். (2.3 விதி மீறல், லெவல் 1)
சுமித் மாதூர் - 50 சதவிகித அபராதம். (2.5 விதி மீறல், லெவல் 1)
ஆட்ட நாயகன் விருது வென்ற நிதீஷ் ராணாவுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.